ஏன் என்னாச்சு? கார் கதவைத் திறந்துகொண்டு கண்ணீர் விட்டபடி ஓடிய எமி ஜாக்சன்.. ஆடிப்போன இயக்குனர்!

By

சென்னை: தனது கார் கதவைத் திறந்துகொண்டு நடிகை எமி ஜாக்சன் திடீரென கண்ணீர் விட்டபடி ஓடினார்.

ஆர்யா, எமி ஜாக்சன் நடித்த படம், மதராசப்பட்டினம். விஜய் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார்.

நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஹனிபா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நடிகை எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன்

இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானார், பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். முதன்முதலாக அவர் சென்னை வந்தபோதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோதும் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் விஜய் இப்போது தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கார் கதவைத் திறந்து கொண்டு ஓடிய எமி ஜாக்சன் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறியுள்ளார்.

ரோட்டுல பசுமாடு

ரோட்டுல பசுமாடு

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ''லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன், இந்தப் படத்துக்காகத்தான் முதன் முதலாக நாட்டை விட்டு வெளியே வந்தார். சென்னை வந்ததும் அவரை அழைத்து வர விமான நிலையம் சென்றேன். காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். சிறிது தூரம் சென்றபின், ரோட்டில் நின்ற பசுவைப் பார்த்து, 'அங்க பாருங்க, ரோட்டுல பசுமாடு நிற்குது' என்றார்.

அழுதபடி ஓடினார்

அழுதபடி ஓடினார்

நான் மனதுக்குள் இன்னும் என்னென்ன விலங்குகளை பார்த்து என்ன சொல்ல போறாரோ? என நினைத்துக் கொண்டேன். பிறகு படப்பிடிப்புத் தொடங்கியது. ஒரு முறை மவுண்ட் ரோட்டில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. சரியான வெயில். 40 டிகிரி அளவுக்கு இருந்தது. தனது கார் கதவைத் திறந்து திடீரென இறங்கி அழுது கொண்டே ஓடினார் எமி ஜாக்சன். என்னாச்சுன்னு தெரியலையே என பயந்துவிட்டேன்.

தத்தெடுக்க விரும்புகிறேன்

தத்தெடுக்க விரும்புகிறேன்

உதவி இயக்குனர் ஓடிவந்து, எமி ஜாக்சனின் அம்மாவும் அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார். எனக்கு இன்னும் அதிக பயம். என்ன விஷயம் என்று பார்க்கப் போனேன். எமி ஜாக்சன் அழுதபடி, இந்தக் குதிரை, வெயிலில் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதைத் தத்தெடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார். நாங்கள் படப்பிடிப்புக்காக ஒரு குதிரையை அழைத்து வந்திருந்தோம்.

தாங்க முடியவில்லை

தாங்க முடியவில்லை

ஷுட்டிங் பிரேக்கில் அந்தக் குதிரை எங்கள் அருகில் தான் இருந்தது. அது வெயிலில் நின்றதை நடிகை எமி ஜாக்சனால் தாங்க முடியவில்லை. பிறகு நாங்கள் அந்தக் குதிரையை ஒரு ஷெட்டுக்கு கொண்டு சென்று நிறுத்தினோம். அதற்கு வழக்கத்தை விட அதிகமான உணவுகளைக் கொடுத்தோம். பிறகு தான் எமி ஜாக்சன் அமைதியானார். இவ்வாறு இயக்குனர் விஜய் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X