ஏம்மா ஏமி, ஷங்கர் பாவம்மா: எவ்வளவு தான் தாங்குவாரு மனுஷன்?
சென்னை: 2.0 பட நாயகி ஏமி ஜாக்சன் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி முடித்துள்ள 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். பீட்டா அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார்.
அது போதாது என்று சமூக வலைதளங்களில் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஏமி.
துண்டு
தற்போது துண்டை கட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஏமி. அதை பார்த்து பலரும் புகழ்ந்தும் வருகிறார்கள்.
ஷங்கர்
ரஜினி காலா படத்தில் நடித்து வருவதால் அனைவரும் அது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2.0 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட டென்ஷனில் உள்ளார் ஷங்கர்.
ஏமி
ஏற்கனவே காலா டென்ஷனில் இருக்கும் ஷங்கருக்கு சமூக வலைதளங்களில் ஏமி அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களால் மேலும் டென்ஷன்தானாம்.
ரசிகர்கள்
ஷங்கர் என்ன தான் டென்ஷன் ஆனாலும் ஏமி ஜாக்சனின் அழகு புகைப்படங்களை ரசிக்கவே பலர் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











