தாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு

Recommended Video

தாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு

சென்னை: குழந்தை பிறந்த உடன் தன் கணவர், குழந்தையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், தற்போது தனது குழந்தையின் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஜாலி வாக் கிளம்பிவிட்டார் எமி. அந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நம் ஊராக இருந்தால் காத்து கருப்பு புடிச்சிக்கும் என்பார்கள். லண்டனில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிள்ளையோடு கிளம்பிவிட்டார் எமி ஜாக்சன்.

மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமான எமி ஜாக்சன் ரஜினிகாந்த், விஜய், ஆர்யா, விக்ரம், தனுஷ் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதோடு தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Amy Jackson posted her baby on social Media

காதலரான ஜார்ஜ் பனையோட்டாவை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் லண்டனில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தனது கர்ப்ப காலத்தை மிகவும் அனுபவித்து ரசித்து பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், சில தினங்களுக்கு முன்னர் ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவானார்.

குழந்தை பிறக்கும் முன்னரே தன்னுடைய குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என பெயரிடப்போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். அவரின் பதிவிற்கு திரையுலகத்தினரும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை பிறந்த உடன் தன் கணவர், குழந்தையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், தற்போது தனது குழந்தையின் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் வெளியே செல்வது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
குழந்தை பிறந்து சில தினங்களே ஆன நிலையில் குழந்தையோடு ஓய்வு எடுக்காமல் அவர் வெளியே செல்வது ஆச்சரியமாக உள்ளது.

நம் தமிழ்நாட்டில் தான் பச்சை உடம்பு காரி, காத்து கருப்பு அடிச்சிடும், பத்திரமா பத்தியமா இருக்க வேண்டும் என்று பாட்டி வைத்தியம் எல்லாம் செல்லுபடியாகும். லண்டனில் அல்ல. எமி ஜாக்சனின் இந்த உற்சாக பதிவிற்கு அனைவரும் அன்பான வாழ்த்துக்களை பதிவிட்டு பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X