ப்பா.. எமி ஜாக்சன் பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு அவரு என்ன பண்றாரு.. ஆத்தாடி எவ்ளோ பெரிய டாட்டூ!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர் நடிகை எமி ஜாக்சன்.
அழகான ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டு தனது பார்ட்னர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை பிரிந்த நிலையில், அமெரிக்க நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் ஏ.எ. விஜய் இயக்கத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் தனது முதுகில் புதிதாக குத்தியுள்ள டாட்டூவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எமி ஜாக்சன் முதுகில் டாட்டூ
இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன் தற்போது தனது முதுகு பக்கத்தில் டாட்டூ ஒன்றை பச்சைக் குத்தி உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பின்னாடி உட்கார்ந்து கொண்டு
எமி ஜாக்சனின் முதுகில் டாட்டூ போடுவதற்காக அவரது பின்னாடி வயதான டாட்டூக் கலைஞர் டாட்டூ போடும் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ள எமி ஜாக்சன் 21ம் நூற்றாண்டின் பிக்காசோ இவர் என டாட்டூக் கலைஞர் மைல்ஸ் லாங் ஃபோர்டை பாராட்டி உள்ளார்.

ஏகப்பட்ட இடங்களில்
முதுகு, கை விரல் பகுதியில் என ஏகப்பட்ட இடங்களில் உடலில் டாட்டூ போட்டிருக்கும் புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பார்ட்னர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை பிரிந்த நிலையில், தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் புதிய காதலரான எட்வுட் வெஸ்ட்விக் உடன் எமி ஜாக்சன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.

நாக்கை நாக்கு உரசி
கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தனது புதிய காதலருடன் நாக்கை நாக்கு உரசி படு மோசமாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார் எமி ஜாக்சன்.

அருண் விஜய் படம்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மதராசப்பட்டினம், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் களமிறங்க உள்ள நிலையில்,ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லைஎயெ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் சம்மருக்கு படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











