கண்றாவியாக மாறிய எமி ஜாக்சன்..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? விமர்சனங்களுக்கு பதிலடி!
சென்னை: புதிய லுக் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நடிகை எமி ஜாக்சன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் எமி ஜாக்சன் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்த படத்தில் இங்கிலாந்து ராணி போல சும்மா அம்சமாக இருப்பார் எமி ஜாக்சன். முதல் படமே மிகப்பெரும் வெறறியை பெற்று, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எமி ஜாக்சன்: மதராசப்பட்டினம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் எமி ஜாக்சன்.
புதிய காதலன்: ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார். பின் காதலருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து, எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை இரண்டு ஆண்டாக காதலித்து வருகிறார்.
மோசமான விமர்சனம்: ஹாலிவுட்டில் படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன், அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோவிற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்ததால், நொந்துப்போன எமி ஜாக்சன் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய படத்திற்காக: இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு நடிகை, என்னுடைய வேலையை நான் செய்கிறேன். கடந்த மாதம் என்னுடைய புதிய படத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அந்தப் படத்துக்காக என்னுடைய உடல் எடையை குறைத்து முழுவதுமாக அந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டேன்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா: இதனை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? பிளாஸ்டிக் சர்ஜரி தவறாகி விட்டதா..? கண்றாவியா இருக்கிறார் என்று பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. நடிகர்கள் பலரும் படத்திற்காக தங்கள் உடல் எடையை குறைக்கிறார்கள், தங்களுடைய தோற்றத்தையே மாற்றிக்கொண்டால் பாராட்டுகிறீர்கள்.
வருத்தமளிக்கிறது: ஆனால், நடிகை செய்தால் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் முகம் கோரமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். இது எனக்கு வேதனையை தருகிறது. படத்திற்காகத்தான் நான் இப்படி மாறி இருக்கிறேனே தவிர, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











