ஆஹா..இதுல எது சோபா, எது நம்ம ஹீரோயின்னு தெரியலையே..? பிரபல நடிகையின் வித்தியாசமான போட்டோ ஷூட்!
சென்னை: நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர், பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன்.
விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

காதல், கர்ப்பம்
இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து தமிழில் நடித்தார். விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்கமகன், விக்ரமின் ஐ, விஜய்யின் தெறி உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களில் நடித்த அவர், தமிழில் கடைசியாக ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார்.

நிச்சயதார்த்தம்
இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். பின்னர் கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆன்ட்ரியாஸ்
இந்த விழாவில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ, பரபரபாக அப்போது வைரலாயின. இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையுடன் இருப்பது போல போட்டோ ஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

ஜாலி கமென்ட்
இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்கள் சிலவற்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், சன்செட், சோபா, சீரிஸ் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதில் எது சோபா என்று தெரியாத அளவுக்கு அதே நிறத்தில் படுத்துக் கிடப்பது போல போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர்.

ஒன்னு வாங்கினால்?
சிலர் ஜாலி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். 'ஆஹா, இதுல எது சோபா, எது எமி-ன்னே தெரியலையே?' என்று ஆச்சரியமடைந்துள்ளனர். சிலர், 'சோபாவில் எப்படி தூங்கன்னு சொல்லிக் கொடுக்கறீங்களாக்கும்?' என்று கேட்டுள்ளனர். ஒருவர், இதுதான் சோபா யோகாவா? என்று கேட்டிருக்கிறார். ஒன்னு வாங்கினதால, ஒன்னு ஃபிரியா கொடுத்தாங்களா? நீங்க வாங்கினது டிரெஸ்சா, சோபாவா? என்று சிலரும் 'எங்க உங்க பாப்பாவை காணும்?' என்று சிலரும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











