மேல கோட்.. கையில லேப்டாப்.. நோ பேன்ட்.. வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறாரா எமி ஜாக்சன்?

சென்னை: நடிகை எமி ஜாக்சன் பேன்ட் அணியாமல், கையில் லேப் டாப்புடன் கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்யாமல் குழந்தைப் பெற்றுக் கொண்ட நடிகை எமி ஜாக்சன், காதலர் ஜார்ஜ் பின்னாயிட்டுவுடன் வாழ்ந்து வருகிறார்.

கர்ப்பம் தரித்ததில் இருந்து சினிமாவுக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன், சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

வொர்க் ஃபிரம் ஹோம்

வொர்க் ஃபிரம் ஹோம் செய்யும் பலரும் லுங்கி அணிந்துக் கொண்டும், உள்ளாடையுடனும் வேலை செய்கின்றனர் என மீம்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அது போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜூம் மீட்டிங்

ஜூம் மீட்டிங்

உலகம் முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வொர்க் ஃபிரம் ஹோமில் இருக்கும் பலரும் Zoom மீட்டிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். நியூ ஏஜ் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்கள் இப்படித்தான் தான் கீழே உடையேதும் அணியாமல் மீட்டிங்கில் கலந்து கொள்கின்றனர் என்ற கேப்ஷனையும் எமி ஜாக்சன் போட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

டிசைன் டிசைனா

டிசைன் டிசைனா

கோட் அணிந்து கொண்டு, கையில் ஆப்பிள் லேப் டாப், காதுகளில் ஹெட்செட் அணிந்து கொண்டு, கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு பலவிதமான போஸ்களை நடிகை எமி ஜாக்சன் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். கருப்பு வெள்ளை புகைப்படங்களையும், கலர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

வொர்க்கவுட்

வொர்க்கவுட்

லாக் டவுன் காரணத்தால் வீட்டிலேயே அடைந்து இருக்கும் நடிகை எமி ஜாக்சன், தனது குழந்தையை வளர்ப்பதிலும் உடற்பயிற்சி செய்வதிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில், வெறும் டாய்லெட் பேப்பரைக் கொண்டு எப்படி வொர்க்கவுட் செய்வது என்பதை டெமோ செய்து காண்பித்து அசத்தி இருந்தார் எமி ஜாக்சன்.

வெப்சீரிஸ் வாய்ப்பு

வெப்சீரிஸ் வாய்ப்பு

2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி உள்ள எமி ஜாக்சன், இறுதியாக சூப்பர் கேர்ள் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். குழந்தை பிறந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் நடிக்கும் முயற்சியில் எமி ஜாக்சன் இதுபோன்ற போட்டோஷூட்களை நடத்தியும் வெப்சீரிஸ் வாய்ப்புகளுக்கு வலைவீசியும் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X