ஏமி ஜாக்சனுக்கு கல்யாணமாம்: ப்ளீஸ், மாப்பிள்ளை யாருன்னு மட்டும் கேட்காதீங்க
Recommended Video

சென்னை: ஏமி ஜாக்சன் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். மேலும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

பிரதீக் பாபர்
பாலிவுட் பக்கம் சென்றபோது நடிகர் பிரதீக் பாபரை காதலித்து அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார் ஏமி ஜாக்சன். அந்த காதல் முறிந்துவிட்டது.

திருமணம்
பிரதீக் பாபர் வேறு ஒரு பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஏமிக்கு இந்த ஆண்டு திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து
ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோடூவை காதலிக்கிறாராம். காதலர் தினத்திற்கு ஜார்ஜுக்கு அவர் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தபோது தான் இது அனைவருக்கும் தெரிய வந்தது.

தேதி
ஏமி தனது காதலர் ஜார்ஜை கடந்த ஆண்டே திருமணம் செய்ய திட்டமிட்டு அது நடக்கவில்லையாம். இதையடுத்து இந்த ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். திருமணத்திற்கான இடம், தேதியை இருவரும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

தொடரும்
திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் ஏமி. ஏமி புதுப் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு வேலை திருமணத்திற்காக தான் இப்படி செய்கிறார் போன்று என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











