ஆத்தாடி.. டாப்லெஸ் போஸ் கொடுத்த அருண் விஜய் ஹீரோயின்.. அதிர்ந்து போன திரையுலகம்!
சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் அச்சம் என்பது இல்லையே படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை டாப்லெஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
ஆர்யா நடிப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
ஆண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த எமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அந்த ஐகளின் ஐ அவள் தானா
ஐ என்றால் அட அழகு என்றால்.. அந்த ஐகளின் ஐ அவள் தானா என ஐ படத்தில் இடம்பெற்ற பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாட்டில் வர்ணித்ததை போலவே இப்பவும் மதராசப்பட்டினம் படத்தில் பார்த்ததை போலவே அழகாக இருக்கிறார் எமி ஜாக்சன். கொஞ்சம் கூட தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே மெயின்டெயின் செய்ய ஆலா யோகாவை அடிக்கடி செய்து வருகிறார்.

ஆண் குழந்தைக்கு அம்மா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு ஜார்ஜ் பன்னாயுட்டுவுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்த நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் எனும் ஆண் குழந்தை பிறந்தது. மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என எமி ஜாக்சன் தனது ஆசையை வெளிப்படுத்தியதும் குடும்பத்தில் விரிசல் விழுந்து ஜார்ஜும் எமியும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர்.

இன்னொரு நடிகருடன் காதல்
காசிப் கேர்ள் எனும் அமெரிக்க வெப்சீரிஸில் நடித்து வரும் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் நடிகை எமி ஜாக்சன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு நாக்கை நாக்கு உரசியபடி எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின. லைக்குகளும் அந்த எக்ஸ்ட்ரா லவ் புகைப்படங்களுக்கு அதிகமாகவே குவிந்தன.

அருண் விஜய்க்கு ஜோடி
ஆர்யா, சியான் விக்ரம், விஜய், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை எமி ஜாக்சன், தனது ரீ என்ட்ரியை நடிகர் அருண் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே படத்தின் மூலம் செய்ய உள்ளார். அருண் விஜய் நடிப்பில் பல படங்கள் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

டாப்லெஸ் போட்டோ
இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன் மீண்டும் தமிழில் நடித்து வரும் நிலையில், மேலாடை அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழ் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை எமி ஜாக்சன் என்ன திடீரென இப்படி அரை நிர்வாண போட்டோவை போட்டுள்ளாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











