என்னவொரு அருமையான வருஷம் அது... ஸ்பெஷல் போட்டோவுடன் நடிகை எமி ஜாக்சன் வாவ் ஆச்சரியம்... ஏன்?
Recommended Video
சென்னை: கடந்த 2019 ஆம் வருடம், என்னவொரு சிறந்த வருடம் என ஆச்சரியமாகத் தெரிவித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
ஆர்யாவின் மதராசப்பட்டினம், விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினிகாந்தின் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன்.
லண்டனை சேர்ந்த இவர், ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நிச்சயதார்த்தம்
பின்னர் கர்ப்பிணி எமிக்கும், அவரது காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் வீடியோ வெளியாகின. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஆண் குழந்தை
இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்று பெயர் வைத்த எமியும் அவர் காதலரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

போட்டோஷூட்
பின்னர், பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் குழந்தைக்கு போட்டோஷூட் நடத்தி பிரமிக்க வைத்தனர். இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஸ்பெஷல் ஃபோட்டோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
ஆச்சரிய வருஷம்
அதில் கையில் குழந்தை, அருகில் செல்ல நாயுடனும் இருக்கிறார் எமி ஜாக்சன். எல்லோரும் கருப்பு உடையில் இருக்கிறார்கள். கேப்ஷனாக, கடந்த வருடம் என்ன ஓர் ஆச்சரியமான வருஷம் என வியந்து எழுதியுள்ளார். அவர் கர்ப்பமானது, குழந்தை பெற்றது ஆகியவற்றை குறிப்பிட்டு இவ்வாறு அவர் எழுதியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











