பாத்ரூமில் பப்பி ஷேம் குளியல்.. முகத்துல என்னம்மா மாஸ்க்.. எமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
லண்டன்: மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான எமி ஜாக்சன் கடைசியாகவும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். அடுத்தடுத்து நடிப்பார் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துக் கொண்டு அவருடனும் ஒரு குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன் விம்பிள்டன் மேட்ச் பார்க்க ரெடியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகைகளின் மார்பிங் வீடியோக்கள் வெளியானாலே சோஷியல் மீடியாவே பதறிவிடும். ஆனால், எமி ஜாக்சன் சர்வ சாதாரணமாக பாத்ரூமில் குளிக்கும் காட்சியையே தனது வீடியோவில் வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பதற வைத்துள்ளார்.

மேலும், அவர் தனது முகப்பொலிவை இந்த மாஸ்க் தான் காப்பாற்றுகிறது என எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை அணிந்துக் கொண்டு வீட்டில் வேலை செய்யும் காட்சிகளையும் அந்த வீடியோவில் ஷேர் செய்துள்ளார்.
ஆர்யா முதல் ரஜினி வரை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் இங்கிலாந்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நிஜமாகவே ஒரு இங்கிலாந்து மாடல் நடிகையை கூட்டிக் கொண்டு வந்து நடிக்க வைத்து "பூக்கள் பூக்கும் தருணம்" என ஒட்டுமொத்த ரசிகர்களையும் பாட வைத்தார் ஏ.எல். விஜய். அந்த படத்தைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, கெத்து, தங்கமகன், ஐ, 2.0 என வரிசையாக பல பெரிய படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை பார்ட்னராக ஏற்றுக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளாமல் அவருடன் வாழத் தொடங்கிய நிலையில், தமிழ் சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வுக் கொடுத்தார்.

குழந்தை பிறந்ததும் விட்டுச்சென்ற பார்ட்னர்: எமி ஜாக்சன் ஆண்ட்ரியாஸ் எனும் ஆண் குழந்தையை தனது பார்ட்னருடன் சேர்ந்து பெற்றுக் கொண்டார். ஆனால், குழந்தை பிறந்து ஒரு வயது ஆன நிலையில், அவரை விட்டு ஜார்ஜ் பிரிந்து விட்டார். அதன் பின்னர், இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் காதல் ஏற்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், அவருடன் சேர்ந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று வளர்த்து வருகிறார் எமி ஜாக்சன்.
முகத்தில் மாஸ்க்குடன்: நடிகை எமி ஜாக்சன் விம்பிள்டன் போட்டியை கடந்த வாரம் கணவருடன் சேர்ந்து பார்க்க எப்படி கிளம்பிச் சென்றேன் தெரியுமா என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது முகத்தை பொலிவுடன் எப்போதும் பார்த்துக் கொள்ள இந்த மாஸ்க்கை தான் அணிந்துக் கொள்கிறேன் என குளிப்பதற்கு முன்பாக டவல் கட்டிக் கொண்டு மாஸ்க் அணியும் காட்சிகளையும் ஷவரில் ஆடையின்றி குளிக்கும் வீடியோவை பின்னழகு மட்டுமே சென்சார் உடன் காட்டியபடி இருக்கும் காட்சிகளையும் அதன் பின்னர் மேக்கப் செய்துக் கொண்டு கணவருடன் விம்பிள்டன் டென்னீஸ் போட்டியை பார்த்துக் கொண்டே லிப் கிஸ் கொடுக்கும் காட்சிகள் வரை ஒரே வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார். அவரை உலகளவில் 13.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு அவர் நடித்த மிஷன் சாப்டர் 1 வெளியானது. மீண்டும் அவர் தமிழில் நடிப்பாரா? மாட்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











