ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தலையில் இடியை இறக்கிய ஏமி ஜாக்சன்
Recommended Video

சென்னை: இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் ஏமி ஜாக்சன்.
இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
அங்கும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார்.

இளைஞர்
இளைஞர் ஒருவர் மீது பாய்ந்து அவரை டைட்டாக கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை ஏமி ஜாக்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர்.

காதலரா?
ஏமி பாலிவுட் பக்கம் சென்றபோது வாரிசு நடிகர் ஒருவரை காதலித்தார். அந்த காதல் முறிந்த பிறகு அவரின் பெயர் அவ்வப்போது யாருடனாவது அடிபடுகிறது. இந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருக்கலாம்
அந்த நபர் புதிய காதலராக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ரசிகர்கள். எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடத் தயாராகிவிட்டனர் ஏமியின் அன்பான ரசிகர்கள்.

தோழி
தனது தோழியுடன் இருக்கும் பிகினி புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன். அவர் அவ்வப்போது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











