28 வயசு.. டூ பீஸில் டான்ஸ்.. கூடவே மழை.. செம கிப்ட்.. ஹேப்பி பர்த் டே எமி.. சூப்பர் போஸ்ட்!
சென்னை: நடிகை எமி ஜாக்சன் தனது 28வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
பிறந்த நாள் அதுவுமாக பிகினி அணிந்து தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.
இந்நிலையில், இன்று காலை டூ பீஸ் அணிந்தபடி மழையில் ஆடும் புகைப்படத்தை பதிவிட்டு நீண்டதொரு நெகிழ்ச்சி பதிவையும் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து நடிகை
இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த எமி ஜாக்சன், ஹாலிவுட் வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார்.

உச்சகட்ட கவர்ச்சி
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் நடிக்க வந்த எமி ஜாக்சன், ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ஐ, 2.0 படங்களில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் இட்லி துணி அணிந்து எமி ஜாக்சன் நடந்து வந்த காட்சியை பார்த்து லிங்கேசன் மட்டுமல்ல தமிழ் நாட்டு இளைஞர்கள் மொத்தமும் மயக்கமடைந்து விழுந்தனர்.

இதெல்லாம் சகஜம்
திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் வெளிநாட்டில் சகஜமான ஒன்றாக மாறி விட்டது. தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டுவை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சினிமாவுக்கு ரெஸ்ட்
தமிழில் எமி ஜாக்சன் கடைசியாக 2.0 படத்தில் நடித்திருந்தார். பின்னர் ஜார்ஜ் பன்னாயிட்டுவுடன் ஏற்பட்ட காதல் பரிசாக கர்ப்பம் தரித்த எமி ஜாக்சன் குழந்தை பேற்றுக்காக சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்து ஓய்வில் இருக்கிறார். குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் கிளாமர் உடையில் இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை களமிறக்கி வருகிறார் எமி ஜாக்சன்.
பர்த்டே
நடிகை எமி ஜாக்சனுக்கு நேற்று 28வது பிறந்த நாள். ஆப்பிரிக்காவில் தனது காதலர் மற்றும் குழந்தையுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் எமி ஜாக்சன். பிறந்த நாளை முன்னிட்டு பிகினி உடையில் குழந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று பதிவிட்டு வைரலாக்கினார் எமி ஜாக்சன்.
மழையில் ஆட்டம்
இந்நிலையில், இன்று காலை எழுந்தவுடன் ஆப்பிரிக்காவில் பெய்து வரும் மழையை ரசித்த படி டூ பீஸில் பின் பக்கம் முழுவதும் தெரியும் படியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு புதிய நாள் கிடைத்தது வரம் தான் என்று நீண்ட நெடிய பதிவு ஒன்றையும் எமி போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











