'ஆம் 22 வாரங்கள் ஆகிறது’..முதன்முறையாக கர்ப்பம் பற்றி பேசிய எமி ஜாக்சன்... என்னா பூரிப்பு பாருங்க!

தனது கர்ப்பம் குறித்து புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

By Staff

Recommended Video

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ

சென்னை: முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் தனது கர்ப்பம் பற்றி பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி. அதனைத் தொடர்ந்து ஐ, 2.0 என விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக முன்னேறினார்.

லண்டனைச் சேர்ந்தவரான எமி, 2.0 படத்திற்குப் பின் தமிழில் எந்தப் படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர், அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரைக் காதலிப்பதாக அறிவித்தார்.

நிச்சயதார்த்தம்:

நிச்சயதார்த்தம்:

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

22 வார கர்ப்பிணி:

22 வார கர்ப்பிணி:

குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோக்கள்:

வீடியோக்கள்:

சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார்.

எமியின் புதிய வீடியோ:

எமியின் புதிய வீடியோ:

இந்நிலையில், முதன்முறையாக தனது கர்ப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

தாய்மையின் பூரிப்பு:

தாய்மையின் பூரிப்பு:

இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்" என கூறியிருக்கிறார். எமியின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில், தாய்மையின் பூரிப்புடன் எமி தோன்றுவதாக ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X