Don't Miss!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணவரை பிரிந்த எமி ஜாக்சன்… புது காதலருடன் ரொமான்ஸ்… வைரலாகும் போட்டோஸ்!
சென்னை : கணவரை விட்டுவிட்டு புது காதலரான பிரிட்டிஷ் நடிகருடன் எமி ஜாக்சன் உறவில் இருப்பதாக பரவி வந்த வதந்தியை, உறுதி செய்யும் வகையில், புது போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், ஆர்யாவுடன் மதராச பட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த எமி, விக்ரமுட ன் ஐ, தனுஷூடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
வந்தாச்சு..
ஆரம்பிக்கலாமா..
சிம்புவை
பார்த்ததும்
திருஷ்டி
உடைத்த
ரசிகை..
செம
ஷோ
காத்திருக்கு!

திருமணம் செய்து கொண்டார்
தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த போதே ஹாலிவுட் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து, தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு லண்டனில் தனது காதலர் ஜார்ஜ் பனயோட்டோவுடன் செட்டிலானார். லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பிரிந்தனர்
இதையடுத்து, திடீரென எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜ் பனயோட்டோவின் புகைப்படத்தையும், அவரின் பெயரையும் நீக்கினார். இதனால், இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரபரப்பாக பரவியது. ஆனால், இது குறித்து எமியோ, ஜார்ஜோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரிட்டிஷ் நடிகருடன் காதல்
சர்வதேச திரைப்படவிழாவில் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக், எமி சந்தித்த போது நட்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நட்பு காதலா மாறி தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்து வருவதாகவும் ஹாலிவுட் வட்டாரத்தில் தகவல் காட்டுத்தீபோல பரவி வருகிறது.

பல இடங்களில் டேட்டிங்
வெறும் வதந்தியாக இருந்த இந்த கிசுகிசு விவகாரம் தற்போது உறுதியாகும் வகையில் எமி தனது காதலருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக், தென்னாப்பிரிக்க மாடல் தாமரா பிரான்செஸ்கோனிவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தால், ஆனால், கடந்த ஆண்டு முன் இருவரும் பிரிந்து விட்டனர்.