உங்களைப் போன்றத் தேவதைகள் எதை செய்தாலும்.. தனுஷ் ஹீரோயினை மானே தேனே லெவலில் வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல இந்தி நடிகை அமைரா தஸ்துர். தமிழில் தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடித்திருந்தனர்.

சந்தானம் ஜோடி
ஏஜிஎஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இதில், சிறப்பாக நடித்திருந்த இவர், பிறகு தமிழில் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.

சோசியல் மீடியா
இந்தியில், குங்க் பூ யோகா, காலாகண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்துள்ள அமைரா தஸ்துர், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்படுபவர். தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிடுவது இவரது வழக்கம். அதைப் பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது.

கவிதை கேப்ஷன்
இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஸ்பெஷலாக, கவிதையாக கேப்ஷன் கொடுக்கும் நடிகை அமைரா தஸ்துர், இந்தப் புகைப்படங்களுக்கும் அப்படி வித்தியாசமான கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பொறுத்துக் கொள்வதா?
அதில், 'என் ஆத்மாவின் நடவடிக்கைகளை, எனக்குள் இருக்கும் வித்தியாசங்களை பொறுத்துக் கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார். உங்கள் கேப்ஷனும் உங்களை போல அழகு என்று சிலர் தெரிவித்துள்ளனர். 'என்னது பொறுத்துக் கொள்வதா? உங்களைப் போன்ற தேவதைகள் எதை செய்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்' என்று சிலர் கூறியுள்ளனர்.

ஒப்பிட முடியாது
இன்னும் சிலர், நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம், நீங்களும் எங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உங்கள் அழகுக்கு முன் யாரையுமே ஒப்பிட முடியாது என்றும் கூறியுள்ளனர். உங்களைத் தினமும் அழகழகாக போட்டோ எடுக்கும் உங்கள் புகைப்படக் கலைஞரை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஒருவர். ஒரு போட்டோவுல மட்டும் ஏன் சோகமா இருக்கீங்க? என்று கேட்டுள்ளார் மற்றொருவர்.

மானே, தேனே லெவல்
இன்னொருவர் உங்கள் புன்னகைக்கு முன்னால் எதுவும் இல்லை என்றும் மொத்தமாக பேச்சு மூச்சில்லாமல் நின்றுவிட்டேன் என்று உருகியுள்ளார். பலர் அவரது அழகை மானே, தேனே லெவலில் ஏக்கமாக வர்ணித்துள்ளனர். ஒரு நெட்டிசன், எந்தச் சூழலிலும் அமைராவை போலவே புன்னகைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











