Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நடுக் கடலில் பிகினியில் பிரேக் ஃபாஸ்ட் செய்த பிரபல தமிழ் நடிகை!
சென்னை : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடித்துள்ள பாஹீரா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் பாஹீரா திரைப்படத்தில் அமைரா தஸ்தூர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடுக்கடலில் பிகினி உடையில் இருந்த படியே பிரேக் ஃபாஸ்ட் செய்து முடித்த புகைப்படத்தை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவிதையாய் மலர்ந்த தேவதை... போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்ட பிரீத்தி

புதுமையான கதை களத்தில்
பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை அமைரா தஸ்தூர் தமிழில் அனேகன் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் திரைப்படமே முன்னணி இயக்குனர் மற்றும் முன்னணி நடிகர் என களமிறங்கிய அமைரா தஸ்தூர் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். எதையும் புதுமையாக செய்யும் இயக்குனர் கே வி ஆனந்த் இந்தப் படத்தையும் புதுமையான கதை களத்தில் இயக்கியிருந்தார்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்திருந்தது
பூர்வ ஜென்மம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு வேடங்களில் அமைரா தஸ்தூர் மற்றும் தனுஷ் நடித்து இருக்க இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அனேகன் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் இந்தியில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததால் இந்தியில் அதிக அளவு கவனம் செலுத்திவந்தார் இதற்கிடையில் ஹாலிவுட் படங்களிலும் சில நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஹீராவில் கதாநாயகியாக
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகை தந்துள்ள நடிகை அமைரா இப்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பாஹீரா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடன இயக்குனர் ஹீரோ இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள பிரபுதேவா இப்பொழுது முழு மூச்சுடன் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பாஹீராவில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். மேலும் ஜனனி, ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

நடுக்கடலில் பிகினியில் பிரேக் ஃபாஸ்ட்
பாஹீராவுக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அமைரா தஸ்தூர் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புயலாக வீசிக் கொண்டிருக்கும் இவர் இப்போது நடுக்கடலில் பிகினி உடையில் பிரேக் ஃபாஸ்ட் செய்த செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.