கோல்டன் பட்டர்பிளை காஸ்ட்யூமில் அசத்தும் அனேகன் பட நடிகை!
சென்னை : தமிழில் அனேகன் படம் மூலம் அறிமுகமான நடிகை அமைரா தஸ்தூர் இப்பொழுது ஹிந்தியில் வலம் வந்து கொண்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பஹீரா மற்றும் காதலைத் தேடி நித்யா நந்தா உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள கொய் ஜானே நா படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக படக்குழு இறங்கி இருக்க அமைரா தஸ்தூர் கோல்டன் பட்டர்பிளை காஸ்ட்யூமில் அசத்தலாக வந்து நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்

இரட்டை வேடங்களில்
தமிழில் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே என்றாலும் இன்றும் ரசிகர்களின் மனதில் ஏறிக்கொண்டு இரங்க மறுக்காமல் பலரின் க்ரஷ்ஷாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தமிழுக்கு அனேகன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் அசத்தி இருந்த இவருக்கு பிறகு என்னமோ தெரியவில்லை தமிழில் எந்த ஒரு படமும் ஒப்பந்தம் ஆகவில்லை.

மிரட்டலான ட்ரைலர்
இதற்கிடையில் இந்தியில் வேட்டையை தொடங்கிய இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வர இப்பொழுது கொய் ஜானே நா என்ற சூப்பர் ஹிட் திரில்லர் படத்தில் நடித்து உள்ளார். கொய் ஜானே நா படத்தின் மிரட்டலான ட்ரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்ட நிலையில் வரும் மார்ச் 26ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

ப்ரமோஷன் பணிகளில்
நொடிக்கு நொடி கைகளை பிசையும் அளவிற்கு திரில்லர் காட்சிகளால் நிரம்பியிருக்கும் கொய் ஜானே நா படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியிருக்க அதில் படக்குழுவினர் அனைவரும் தீவிரமாக உள்ளனர். நடிகர் அமைரா தஸ்தூரும் சமுக வலைதளங்களில் கொய் ஜானே நா படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் மும்முரமாக உள்ளார்.

தொடை தெரியும் அளவிற்கு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமைரா தஸ்தூர் கோல்டன் பட்டர்பிளை காஸ்ட்யூமில் தொடை தெரியும் அளவிற்கு கச்சிதமாக அணிந்துள்ள இந்த வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











