போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு!
மும்பை: போதைப் பொருள் வழக்கில், தனுஷ் பட ஹீரோயின் பெயர் அடிபட்டதை அடுத்து அவருடைய வழக்கறிஞர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் சுஷாந்த் சிங் காதலி, நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணை
இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.

பார்ட்னர் கேப்ரில்லா
இவர்கள் அனைவரும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் பார்ட்னரான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

லண்டன் சென்றதால்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகை சப்னா பாபிக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பினர். அதில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜராகும்படி கூறியிருந்தனர். அவர் லண்டன் சென்றுவிட்டதால், ஆஜராகவில்லை. இதுபற்றி அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

லோவினா லோத்
இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை லுவீனா லோத், பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த வீடியோவில், எனது கணவர் சுமித் சபர்வால் போதைப் பொருள்களை சப்ளை செய்பவர். நடிகைகள் அமைரா தஸ்துர், சப்னா பாபி உள்பட சில நடிகைகளுக்கு போதைப் பொருள்களை வழங்கி வந்தார்.

அமைரா தஸ்துர்
அதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார். அதோடு இயக்குனர் மகேஷ் பட் மீதும் பரபரப்புப் புகாரை கூறியிருந்தார். அவர் பாலிவுட்டின் டான் போன்றவர் என்றும் தன்னையும் தன் குடும்பத்தையும் மிரட்டி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதை மகேஷ் பட்-டின் வழக்கறிஞர் மறுத்திருந்தார்.

நற்பெயருக்கு களங்கம்
இந்நிலையில், நடிகை அமைரா தஸ்துரின் வழக்கறிஞரும் லுவீனாவின் புகாரை மறுத்துள்ளார். நடிகை லுவீனா, அந்த வீடியோவில், கூறியுள்ள அனைத்தும் தவறான, ஆதாரமற்றத் தகவல் என்றும் இதன் மூலம் அமைராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அனேகன் ஹீரோயின்
இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது, அதற்கு கண்டனம் தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைரா, தமிழில் தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் நடித்தவர். சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் இன்னும் முடியவில்லை.


Click it and Unblock the Notifications











