பகலில் வரும் நிலா போல பளிச்சிடும் அமைரா தஸ்தூர்!
சென்னை: நடிகை அமைரா தஸ்தூர் தமிழ் சினிமாவிற்கு அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்
நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடித்து இருப்பார்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்பொழுது பகலிலே வரும் நிலவு போல பளிச்சிடும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் அமைரா தஸ்தூர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்
இயக்குனர் கே வி ஆனந்தின் திரைப்படங்கள் என்றாலே அதில் வித்தியாசமான கதைக்களம் மட்டுமல்லாமல் சமூகத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளும் அடங்கி இருக்கும் அவ்வாறு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அனேகன். நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

முதல் படத்திலேயே பாராட்டுக்கள்
தொடர்ந்து பாலிவுட் படங்களில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகை என பாராட்டுக்களைப் பெற்றார். அனேகன் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எதிர்பார்த்தபடி தமிழில் பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை இந்த நிலையில் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். இப்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார்

சைக்கோ கொலைகாரனாக
அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். பிரபுதேவா இந்த படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் அழகான பெண்களை தேடி பிடித்து காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அணுஅணுவாகச் சித்திரவதை செய்து கொள்ளும் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது

பகலில் வரும் நிலவை போல
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அமைரா தஸ்தூர் காதலை தேடி நித்யா நந்தா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் அமைரா தஸ்தூர் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை திணறடிக்கும் அமைரா தஸ்தூர் இப்பொழுது பகலில் வரும் நிலவை போல பளிச்சிடும் அளவான கவர்ச்சியுடன் அமைரா தஸ்தூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











