கொரோனோ பீதி குப்புனு கிளப்புது, ஹாலிவுட் ஸ்டாராம்ல? தனுஷ் நாயகியை தறிகெட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம், அனேகன். இதில் நாயகியாக நடித்தவர், அமைரா தஸ்துர்.
இதில் சிறப்பாக நடித்திருந்த இவருக்கு, பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு இந்தியில் கவனம் செலுத்தினார்.
ஓடி ஓடி உழைக்கணும்
ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, காலா காண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால் வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம்
இவர், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். இதைப் பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் அவர்கள் பக்கத்துக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய கிளாமர் போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதுக்கும் மேலே
இந்தப் போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோவுக்கு, ஹாலிவுட் ஸ்டாரா? என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள், ஹாலிவுட் ஸ்டாரா, அதுக்கும் மேலே என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் கொரோனா வைரஸ் பரவுல நேரத்துல, ஹாலிவுட் ஸ்டார்னு ஏன் அங்க இங்கன்னு சுத்தறீங்க? என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

சூரியனே கூலிங் கிளாஸ்
பல ரசிகர்கள் அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். சிலர் கண்டபடி கலாய்த்துள்ளனர். நீங்க ரொம்ப அழகு, இருந்தும் ஏன் அதிகமான படங்கள்ல நடிக்கிறதில்லை?' என்று கேட்டுள்ளனர். ஹாலிவுட் ஸ்டார்களோட உங்களை கம்பேர் பண்ணாதீங்க. நீங்க வேற லெவல்ல இருக்கீங்க' என்று சிலர் வழிந்துள்ளனர். சில ரசிகர்கள், உங்களை பார்த்து அந்த சூரியனே, கூலிங் கிளாஸ் போட வேண்டியிருக்கும் என்று கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











