'மீ டூ': சூப்பர் ஸ்டார் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிடப் போகும் பிரபல நடிகை
மும்பை: திருமணமான பிரபல நடிகர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப் போவதாக பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அவரை பார்த்துவிட்டு பல நடிகைகள் தற்போது பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.
பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் மீ டூ என்று கேட்கும் அளவுக்கு புகார்கள் வருகின்றது.

புகார்
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சூப்பர் ஸ்டார் பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிடப் போகிறாராம். அந்த சூப்பர் ஸ்டார் சமூக பிரச்சனைகள் குறித்து தனது படங்களில் பேசுவதற்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்
6 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2012ம் ஆண்டு அந்த பிரபல நடிகையும், சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர். அந்த படத்தில் நடித்தபோது அதுவும் செட்டில் வைத்து சூப்பர் ஸ்டார் அந்த நடிகைக்கு தொல்லை கொடுத்துள்ளார். அதை பற்றி தான் நடிகை பேசப் போகிறாராம். அந்த தகவல் எப்பொழுது வெளியாகும் என்று பலர் காத்திருக்கிறார்கள்.

பிள்ளைகள்
அந்த சூப்பர் ஸ்டாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளை விடுமுறையின்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார் அவர். மேலும் தாராளமாக செலவு செய்வதற்கு பெயர் போனவர் அந்த நடிகர். பல ஆண்டுகளாகவே அவர் தாம் தூம் என்று தான் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட்
அந்த நடிகர் பற்றி கிசுகிசுத்தே பாலிவுட்காரர்களுக்கு வாய் வலித்துவிட்டது. அந்த அளவுக்கு பல பிரபல நடிகைகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவர் எப்படிப்பட்டவர் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர் விவகாரங்கள் வெளியே வருவது இல்லை.

ஆதரவு
அந்த நடிகரின் மனைவியும் சினிமா துறையை சேர்ந்தவர் தான். பெண்ணியம் பற்றி பிரமாதமாக பேசுவார். அம்மணி தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கும் தனது கணவர் பற்றி தெரியும். பல முறை அவரை எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தான் அந்த நடிகர் பற்றி கிசுகிசு இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











