அந்த ஹீரோவை எங்கே விட்டாலும் திரிஷா வீட்டுக்குத்தான் போவாராம்.. என்னென்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாமி உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்றும்; அதில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி GOAT படத்தில் கேமியோ ரோலை திரிஷா ஏற்றிருக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நோ திருமணம்: இதற்கிடையே திரிஷாவுக்கு 40 வயதாகியும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. வருண் என்பவருடன் நடந்த நிச்சயதார்த்தம் திருமணம்வரை செல்லவில்லை. அதனையடுத்து நடிகர் ராணா டகுபதியை அவர் காதலித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இரண்டு தரப்பும் அதை ஊர்ஜிதப்படுத்தவில்லை. அதேசமயம் ராணாவின் குடும்ப நெருக்கடியால்தான் அவர்களது காதல் பிரிந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாகவே ஓடியது.
ட்ரெண்டாகும் ராணாவின் பேச்சு: இந்நிலையில் திரிஷா குறித்து ராணா டகுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அவரிடம் மிர்ச்சி சிவா, சென்னையில் உங்களுக்கு தெரியாத ஏரியாவில் உங்களை விட்டுவிட்டால் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிடுவீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராணா, “கண்டிப்பாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு விட்டாலும் திரிஷாவின் வீட்டுக்குத்தான் போவேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











