கதை பிடித்துப் போனதால், ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய அனன்யா

திருவனந்தபுரம்: அங்காடித் தெரு மகேஷ்- அனன்யா இணைந்து நடித்து வரும் படம், 'இரவும், பகலும்'. இப்படத்திற்கு அட்வான்ஸாக ஒரே ஒரு ரூபாயை மட்டும் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம் அனன்யா.

ஏற்கனவே, ஜோசப் தளியத் டைரக்ஷனில், மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம் 'இரவும் பகலும்'. தற்போது மீண்டும் அதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

கதை பிடித்துப் போனதால், இப்படத்திற்காக வெறும் ஒரு ரூபாய் மட்டும் அட்வான்ஸாக வாங்கிக் கொண்டாராம் அனன்ய.

அனன்யா நடிப்பில்....

அனன்யா நடிப்பில்....

திருமணம், விளையாட்டி என பலப் பிரச்சினைகளில் சிக்கி, சில காலம் திரை உலகை விட்டு விலகி நின்ற அனன்யா, தற்பொது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனன்யாவின் ஜோடியாக அங்காடித் தெரு படத்தில் நடித்த மகேஷ் நடித்து வருகிறார்.

பகலில் மாணாவன், இரவில் திருடன்....

பகலில் மாணாவன், இரவில் திருடன்....

பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் திருடனாகவும் வாழும் ஒரு இளைஞன் சந்திக்கும் காதலும், அதனைத் தொடர்ந்து அவன் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களுமே இந்த படத்தின் கதை.

தீனா இசையில்....

தீனா இசையில்....

இப்படத்திற்கு ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, தீனா இசையமைக்கிறார். பாலா ஸ்ரீராம் டைரக்ஷன். ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி இந்த படத்தை தயாரிக்கிறார்.

நகைச்சுவை காதல் படம்....

நகைச்சுவை காதல் படம்....

'இரவும், பகலும்' படம் பற்றி அதன் டைரக்டர் பாலா ஸ்ரீராம் கூறும்போது, ‘நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச்சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறோம்.

ஒரு ரூபாய் முன்பணம்....

ஒரு ரூபாய் முன்பணம்....

அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு நடிக்க வந்தார். இந்த படமும், கதாபாத்திரமும் தன் சினிமா பயணத்தில் தனி இடத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் மகேஷ் நடித்தார்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X