மீண்டும் மேக்கப் போட்டார் அனன்யா!

By Shankar

திருமண சர்ச்சையில் ஒரு தீர்வு கிடைக்கிற மாதிரி தெரியாததால் மீண்டும் மேக்கப் போட்டார் நடிகை அனன்யா.

ஒரு மலையாள 3 டி படத்தில் அவர் நடிக்கிறார்.

"நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்தவர் அனன்யா. இவருக்கும் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

ஆரம்பத்தில் ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என ஒற்றைக் காலில் நின்ற அனன்யா, இப்போது இரண்டு காலிலும் நின்றபடி, வேண்டாம் ஆஞ்சநேயன் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

விஷயம் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்ட இயக்குநர்கள் மீண்டும் அவர் வீட்டுக் கதவை பெட்டிகளோடு வந்த தட்ட, முதல் படமாக மலையாளத்தில் ரத்தா ராஷா என்ற 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

கல்லூரி மாணவரி, மோகினிப் பிசாசு என இதில் அவருக்கு இரட்டை வேடமாம். 3 விதமான க்ளைமாக்ஸாம்.

இவரது பேய் கெட்டப்பைப் பார்த்து உடன் நடித்த சன்னி வனே என்ற நடிகர் மிரண்டு விழுந்துவிட்டாராம். தெளிய ரொம்ப நேரமானதாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X