ஆத்தி.. சம்மர் முடிந்தாலும் சம்பவம் தொடருதே.. மாளவிகா மோகனை தொடர்ந்து அனன்யாவும் இட்லி துணியுடன்!
க்ரீஸ்: பாலிவுட்டின் இளம் கவர்ச்சிப் புயல் அனன்யா பாண்டே க்ரீஸ் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே பிகினி உடையில் எடுத்த லேட்டஸ்ட் பீச் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.
பொதுவாகவே நடிகைகள் சம்மர் காலங்களில் தான் அதிகளவில் தீவுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருவார்கள்.

ஆனால், இன்னமும் வெயில் தாக்கம் இந்தியாவில் அதிக இடங்களில் உள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு நடிகைகள் கிளம்பிச் சென்று தங்கள் ஃபாலோயர்களை மேலும், அதிகரிக்க பிகினி போட்டோக்களை சப்ஸ்கிரிப்ஷன் எல்லாம் ஆரம்பிக்காமலே வெளியிட்டு வருகின்றனர்.
மலைக்க வைத்த மாளவிகா மோகனன்: சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்குச் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அதிகரித்துள்ளார். இந்த ஆண்டு ஏற்கனவே பிரபாஸ் உடன் நடித்த ராஜாசாப் வெளியான நிலையில், அடுத்ததாக சர்தார் 2, பாக்கெட் நாவல் என வரிசையாக 2 தமிழ் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், கிடைத்த கேப்பில் டூர் அடித்த மாளவிகா மோகனன் பிகினி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இட்லி துணியுடன் அனன்யா பாண்டே: விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நடித்த லைகர் படம் மிகப்பெரிய ட்ரோல்களை சந்தித்து ஃப்ளாப் ஆனது. பாலிவுட்டின் வில்லன் நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே. வாரிசு நடிகையான இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய ஹிட் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களை பார்க்க சுமார் 26.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். க்ரீஸ் நாட்டுக்கு டூர் போன இடத்தில் இட்லி துணியுடன் ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு சம்பவம் செய்துள்ளார் அனன்யா பாண்டே.
பிகினி பேக்: ஆனன்யா பாண்டே தனது வெள்ளை நிற கவுனை கழட்டிப் போட்டு விட்டு பிகினியுடன் கடலில் குளிக்கும் போட்டோக்களை வரிசையாக அடுக்கிய நிலையில், அவரது போல்ட் புகைப்படங்களை தாண்டி ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது அவர் வைத்திருந்த பிகினி பேக் தான் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications