கரகாட்ட பயிற்சியா.. தலையில் இளநீர் வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. செம வைரல்!

மும்பை: இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் நடிகை அனன்யா பாண்டே தனது தலை மீது இளநீரை வைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார் உடன் இவர் நடித்துள்ள Khaali Peeli திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.

தலையில் இளநீரை வைத்து பக்காவா அனன்யா பாண்டே பேலன்ஸ் பண்ணும் புகைப்படத்தை இஷான் கட்டார் எடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே

பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. கடந்த ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். இந்த ஆண்டு மறைந்த நடிகர் இர்ஃபான் கான் நடிப்பில் வெளியான ஆங்கிரேஸி மீடியம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

மாஸ்டர் ஹீரோயினுடன்

மாஸ்டர் ஹீரோயினுடன்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டார், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். அந்த படத்தில் நம்ம மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ அனன்யா பாண்டே உடன் அவர் நடித்துள்ள படம் ரிலீசாக போகிறது.

தலையில் இளநீர்

தலையில் இளநீர்

இந்நிலையில், Khaali Peeli ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை அனன்யா பாண்டே. தனது தலையில் இளநீரை வைத்து ஆடாமல், அசையாமல், கீழே விழாமல் பேலன்ஸ் செய்து வைத்தபோது இஷான் கட்டார் எடுத்த புகைப்படத்தையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து வைரலாக்கி வருகின்றனர். இஷான் கட்டார் மொபைலில் எடுத்த வீடியோவையும் அனன்யா ஷேர் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இளநீரை பேலன்ஸ் பண்ண முடியாமல் கீழே போட்டு விட்டு, அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களை பார்த்த ரசிகர்கள் பாராட்டியும் கலாய்த்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஜி பிளெக்ஸில் Khaali Peeli திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கான புரொமோஷன் வேலைகளில் நடிகை அனன்யா பாண்டே தற்போது தீவிரம் காட்டி வருகிறார். படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் இஷான் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது புதிய படத்திற்காக ரசிகர்களை தயார் படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X