ஷாருக்கான் எனக்கு அந்த மாதிரிதான்.. ஓபனாக பேசிய நடிகை.. செம ரிலேஷன்ஷிப்

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் ஷாருக்கான் பற்றி நடிகை அனன்யா பாண்டே பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஷாருக்கான் நடித்த பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகின. இந்தப் படங்களுக்கு முன்னதாக அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்திருந்தன. அதனால் கட்டாயம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர். ஒரு ஹிட்டுக்கு காத்திருந்த அவருக்கு வரிசையாக மூன்று ஹிட்டுகள் கிடைத்தன. இதனால் ஷாருக்கானும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

அட்லீக்கு முதல் படம்: அந்த மூன்று படங்களில் ஜவான் சக்கைப்போடு போட்டது. கோலிவுட் இயக்குநரான அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

அடுத்த படமும் அட்லீ: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Ananya Pandey Emotional talks about Shah rukh Khan at Recent Interview

ஷாருக்கானின் புதிய படம்: ஷாருக்கான் இப்போது தி கிங் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ஜவான், பதான், டன்கி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அதே வைபை இதிலும் தக்க வைக்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். இதற்கிடையே அவருக்கு தமிழ் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் எழுந்திருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

அனன்யா பாண்டே பேட்டி: இந்நிலையில் ஷாருக்கான் குறித்து நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ஷாருக்கான் எனக்கு இரண்டாவது அப்பா மாதிரியானவர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் மிக நேர்த்தியாக கையாள்வார். நான் சிறு வயதாக இருக்கும் ஆர்யன், சுஹானா, அப்ராம் ஆகியோருக்கு ஷாருக்கான் எவ்வளவு நல்ல தந்தையாக இருந்தார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.

அவரை போல் யாரும் இல்லை: ஷாருக்கானை போல் வேறு யாரும் இல்லை. அவரிடம் நீங்கள் பேசினால், நீங்கள் உலகில் உள்ள ஒரே மனிதர் என்பது போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்திவிடுவார். ஷாருக்கானின் மகள் எனக்கு சிறந்த தோழி. எனது தோழியில் அப்பா அவர். அதன் காரணமாக நாங்கள் அனைத்து ஐபிஎல் போட்டிகளுக்கும் அவருடன் செல்வோம்" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. அனன்யா பாண்டேவை பொறுத்தவரை அவர் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவர் கடைசியாக் கேசரி சேப்டர் 2 என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X