இது வேறயா.. ஆன்லைனில் பெல்லி டான்ஸ் கற்கும் விஜய் தேவரகொண்டா ஹீரோயின்.. ஒரே குஷி தான் போங்க!

பாலிவுட்டின் இளம் நடிகை அனன்யா பாண்டே ஆன்லைனில் பெல்லி டான்ஸ் கற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சன்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே, கடந்த ஆண்டு தான் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இளமையும் கவர்ச்சியும் கொண்ட அவருக்கு தொடர்ந்து பல புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

ஒரே ஆண்டில்

ஒரே ஆண்டில்

2019ம் ஆண்டு நடிகை அனன்யா பாண்டேவுக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் உருவானது. ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2ம் பாகத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து பதி பத்னி அவுர் ஹோ என்ற படத்திலும் நடித்து இருந்தார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன.

ரொம்ப பாதித்தது

ரொம்ப பாதித்தது

அடுத்ததாக இந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான ஆங்கிரேஸி மீடியம் படத்தில் நடித்திருந்தார். மறைந்த திறமையான நடிகர் இர்ஃபான் கான் நடிப்பில் அந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் இர்ஃபான் கான் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாக இரங்கல் தெரிவித்திருந்தார் அனன்யா.

ஃபைட்டர் ஹீரோயின்

ஃபைட்டர் ஹீரோயின்

டோலிவுட், கோலிவுட் என கலக்கி வரும் அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ஃபைட்டர் படத்திலும் அனன்யா பாண்டே நடித்து வருகிறார். லாக்டவுன் காரணத்தால், ஃபைட்டர் படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெல்லி டான்ஸ்

பெல்லி டான்ஸ்

சமீபத்தில் சுஹானா கான் ஆன்லைனில் பெல்லி டான்ஸ் கற்றுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது பாலிவுட்டின் இளம் நடிகை அனன்யா பாண்டேவும் பெல்லி நடனத்தை கற்று வரும் விஷயம் கசிந்திருக்கிறது. அனன்யா பாண்டே வெளியிடாத இந்த போட்டோவை அவரது நடன பயிற்சியாளர் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ
பிங்க் பிரா

பிங்க் பிரா

பிங்க் நிற ஸ்போர்ட்ஸ் பிராவும் அதற்கு மேட்சிங்கான டைட் பேன்ட்டையும் போட்டுக் கொண்டு ஆன்லைனில் பெல்லி டான்ஸை பயின்று வரும் அனன்யா பாண்டேவின் வீடியோ கால் ஸ்க்ரீன் ஷாட்டை அவரது பயிற்சியாளர் சஞ்சனா பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். விரைவிலேயே பெல்லி நடனம் ஆடும் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கிடக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X