வெள்ளத்தில் மிதந்த வீடு: 2 நாட்களாக நீரில் தத்தளித்த நடிகை அனன்யா
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் நடிகை அனன்யாவின் வீட்டில் நீர் புகுந்தது. இரண்டு நாட்கள் நீரில் தத்தளித்த அவர் தற்போது பத்திரமான இடத்தில் உள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. தற்போது மழை நின்றுள்ளதால் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வசதியாக உள்ளது.
இந்நிலையில் நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனன்யா வசிக்கும் பெரும்பாவூர் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தத்தளித்துள்ளார்.
அதன் பிறகு அவர் அங்கிருந்து வெளியேறி நடிகை ஆஷா சரத்தின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











