Kiran: பாத்துமா பட்டன் கழண்டுட போது.. டைட்டான சட்டையில் கிரணின் விவகாரமான போஸ்!
சென்னை: கோலிவுட்டில் இப்போது டாப் நடிகர்களாக இருக்கும் கமல்ஹாசன், விக்ரம், அஜித் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை கிரண் ராத்தோட். 2000 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்த இவர், இப்போது திரையுலகை விட்டு விலகி இணையத்தில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுக்கு இருக்கும் போட்டோவை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த நடிகை கிரண், யாதீன் என்கிற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, நடிகர் சியான் நடித்த ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும், பிரசாந்துடன் வின்னர் படத்திலும், அஜித்துடன் வில்லன் படம் என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இவர் தமிழில் படம் மட்டுமல்ல சில இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை கிரண் ரத்தோர்: பீக்கில் இருந்த கிரண் காதல் தோல்வி ஏற்பட சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அந்த நேரத்தில் நல்ல நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தன. ஆனால், மன அழுத்தத்தால் அவற்றை வேண்டாம் என சொல்லிவிட்டார். அதன் பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வரவில்லை. இதைத்தொடர்ந்து, விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார். தெலுங்கிலும் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். நடிகை கிரணுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், ஹீரோயினாக நடித்து வந்த இவர், ஆம்பள படத்தில் அம்மாவாக நடித்தார்.
கவர்ச்சி ஆட்டம்: படமும் இல்லை, வருமானமும் இல்லாததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோவை வெளியிட்டு வந்தார். இதில் வந்த வருமானமும் போதாததால், ஆண்களுக்கான பிரத்யேகமாக ஒரு ஆப்பை கண்டுபிடித்து, அதில், வீடியோ காலுக்கு தனி ரேட், பேசினால் தனி ரேட் என கட்டணம் வசூலித்து வந்தார். இந்த ஆப்பில் பலர் பணத்தை கட்டி ஏமாந்து போனார்கள். இதைத்தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கேயும் இவரால் தாக்கு பிடிக்க முடியாமல், ஒரே வாரத்தில் திரும்பி வந்தார். தற்போது நடிகை கிரண், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடித்து இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் 4ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
யம்மா பாத்துமா: நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது, இவர், டைட்டான சட்டை அணிந்து கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு ஒரு சிலர் லைக்குகளை குவித்து வந்தாலும், சிலர் இது எல்லாம் தேவை தானா என்றும், சட்டை பட்டன் கழண்டு விட போது பார்த்து என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் மட்டும், மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











