மும்பையில் கலக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா….
மும்பையில் கார்ப்பரேட் சினிமா உலகில் விஜய்டிவி பாவனா ரொம்ப பிரபலம். ஷாருக், ஹிருத்திக் ரோசன், தீபிகா, கத்ரீனா என அனைவரின் நட்பு வட்டத்திலும் இருக்கிறார் பாவனா.
தமிழர்கள் பாலிவுட் உலகில் பிரபலமடைவது இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது.
ஹேமா மாலினி, ஸ்ரீதேவி, பிரபுதேவா, ஏ.ஆர் முருகதாஸ், தனுஷ் என தமிழகத்தை சேர்ந்தவர்கள் மும்பையில் பிரபலமாக இருக்கின்றனர் அந்த வரிசையில் பாவனாவும் இணைந்துவிட்டார்.

சூப்பர் சிங்கர்
ராஜ் டிவியில் பீச் கேர்ஸ் நடத்தியதை விட சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனாதான் பிரபலம். அதே பிரபலத்தோடு கணவர் நிகிலுடன் மும்பையில் குடியேறினார்.

ஷாருக் நட்பு
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தொடங்கி ஷாருக்கின் நான்கு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியிருக்கிறார் பாவனா அதனால் ஷாருக்கின் பேவரைட் தொகுப்பாளினியாகிவிட்டார் பாவனா.

பாலிவுட் நட்சத்திரங்கள்
ஹிருத்திக் ரோசன், கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே என பல பாலிவுட் பிரபலங்கள் பவானாவின் நட்பு வட்டத்தில் உள்ளனராம்.

ரஜினி, ரஹ்மான்
கோச்சடையான் திரைப்பட விழாவில் ரஜினியிடம் பாவனாவைப் பற்றி பாராட்டியுள்ளார் ஷாருக். பாவனா நிகழ்ச்சி தொகுப்பாளராக போகும் இடங்களில் எல்லாம் பிரபலங்களுடன் செல்பி எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் ஹேப்பி நியூ இயர் படக்குழுவினர் எடுத்த செல்பிதான் டிவிட்டரிலும் பிரபலமானது.


Click it and Unblock the Notifications











