Dhivyadharshini: காலில் விழுகிறார்கள்.. சங்கடமா இருக்கு.. தொகுப்பாளினி டிடி பேட்டி!
சென்னை: திறமையான பேச்சாலும், அழகாலும் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் அவ்வப்போது சின்னத்திரையில் தென்படவில்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமா இசைவெளியீட்டு விழா என சில முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
திவ்யதர்ஷினி சிறு வயதிலேயே துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக மாறினார். சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்களை பேட்டி எடுத்து பெயர் எடுத்தார். அந்த நிகழ்ச்சி வெற்றி பெற காரணமே டிடியில் அதிரடியான கேள்வியும், கலகலப்பான பேச்சும் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறிய டிடி, பாட்டு போட்டி, கேம் ஷோ என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திவ்யதர்ஷினி: இப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிஸியாக இருந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திவ்யதர்ஷினி திருமணம் ஆனதும், தாலி வெளியே தெரியும் படியே, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அது மட்டுமில்லாமல் விஜய் டிவி, நம்ம வீட்டு பெண் டிடிக்கு நலங்கு வைத்து திருமணத்தை கொண்டாடினார்கள். ஆனால், டிடியின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் கூட நீடிக்காமல் முடிவுக்கு வந்துவிட்டது.
மீண்டு வந்தார்: தற்போது, தனியாக வாழ்ந்து வரும் டிடிக்கு காலில் வலி ஏற்பட, அதற்காக ஆப்ரேஷன் செய்யப்போய் அது விபரீதத்தில் முடிய, சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத அவதிப்பட்டார். தான் பட்ட வேதனையை டிடி, ஒரு நிகழ்ச்சியில் கண்ணீருடன் பேசி இருந்தார். அதன் பின், டிடிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த ஆப்ரேஷனுக்கு பிறகு டிடி மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.
சங்கடமாக இருக்கும்: அண்மையில் டிடி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த டிடி, தமிழ்நாட்டில், எந்த இடத்திற்கும் ஈசியாக சென்றுவிட முடியாது, பொது வெளியில் பார்க்கும் மக்கள் திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள், அது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும் எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. பேருந்து,ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்ய ஆசையாக இருந்தாலும் அதை தவிர்க்க வேண்டி உள்ளது. ஆனால், வெளிநாட்டில் அப்படி இல்லை, நம்மை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என்று டிடி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications