‘பாசமலர்’ ஃபீலிங்..மல்லிகைப்பூ, பட்டுப்புடவை, ஊஞ்சல்… டிடியின் க்ளாசிக் லுக்!

சென்னை: ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு முறை கவனத்தை ஈர்த்துள்ளார். 'டிடி' என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திவ்ய தர்ஷினி: பட்டுப்புடவையில் பாரம்பரிய தோற்றத்தில், தலையில் மல்லிகைப்பூ வைத்து, ஊஞ்சலில் ஆடியபடி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களை மயக்கி வருகிறது. சிவாஜி கணேஷன் நடித்த பாசமலர் படத்தில் இடம்பெற்ற 'மலர்ந்து மலராத...' என்ற அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் பாடலுக்கு அவர் ஊஞ்சலில் ஆடியபடி, பலருக்கும் நினைவுகளை கிளறியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துவிட்டீர்கள்", "அழகு, செம்ம க்ளாசிக் ஃபீல்" என கமெண்ட்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். சிலர், டிடியின் எளிமையான அழகையும், பாரம்பரிய ஸ்டைலையும் குறிப்பிட்டு புகழ்ந்து வருகிறார்கள்.

divyadarshini photos
Photo Credit:

அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளர்: விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சி டிடியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. விஜய் டிவியில் செல்லப்பிள்ளையான டிடி நிகழ்ச்சி தொகுத்து வழங்கினாலே, அந்த ஷோ வெற்றி தான் என்று சொல்லும் அளவிற்கு, தனது பேச்சு திறனால் அனைவரையும் கட்டிப்போட்டுவிடுவார். தொகுப்பாளராக மட்டுமின்றி, சினிமாவிலும் தன்னுடைய தடத்தை பதித்த டிடி. நள தமயந்தி, விசில், பவர் பாண்டி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது டிடி இசைவெளியீட்டு விழா, அரசியல் நிகழ்வு என குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

பாசமலர் பீலிங்: சிறிய திரையிலும் பெரிய திரையிலும் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, தற்போது சமூக வலைதளங்களிலும் அதே மாயையை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு புள்ளி 3 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவரது இந்த ஊஞ்சல் வீடியோவும், ரசிகர்களின் இதயத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளையடித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X