நம்ம டிடியா இது.. ஆளே மாறிட்டாங்களே.. செம லுக்கில் கலக்குறாங்க.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் டிடி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

Divyadharshini DD

செம ஃபேமஸான நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அவரைத் தொடர்ந்து டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருந்த சூழலில் டிடி தொகுத்து வழங்கியதை அடுத்து மேலும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

விலகிய டிடி: காஃபி வித் டிடி நிகழ்ச்சியை மட்டுமின்றி பிற நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. இந்தச் சூழலில் அவர் விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இருந்தாலும் திரைப்பட விழாக்களை அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் தோன்றக்கூடியவர். சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தில் நடித்தவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. திவ்யதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் திவ்யதர்ஷினி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மாடர்ன் ட்ரெஸ்ஸில் (சட்டை, பேண்ட்) அணிந்தபடி படு கூலாகவும், ஸ்டைலாகவும் அவர் ஃபோட்டோஷூட் வீடியோவைத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம டிடியா இவங்க என்று கமெண்ட்ஸ் செய்து அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X