VJ Parvathy: கையில் பீர்.. வெளிநாட்டில் நண்பர்களுடன் அட்டகாசம் செய்யும் விஜே பார்வதி!
சென்னை: ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் செட்டிலாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கையில் பீருடன் இருக்கும் போட்டோவை போட்டு, பேசுபொருளாகி இருக்கிறார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்த பார்வதி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பின் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்க்குகளை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். தற்போது, சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

விஜே பார்வதி: இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், தற்போது, இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு வியட்நாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த போட்டோவை தற்போது அவர் ஷேர் செய்துள்ளார். அதில், கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த இணையவாசிகள், என்ன பாரு சரக்கா என கேட்டு வருகின்றனர்.

புது பணக்காரன்: அண்மையில், ரம்ஜான் கொண்டாட்டத்தின் போது யூடியூர் இர்பான் ஏழை எளிய மக்களுக்கு ஆடைகள் வழங்கி சர்ச்சையில் சிக்கினார். அவரை கண்டித்த விஜே பார்வாதி, இவர் பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள் உட்கார்ந்து கொண்டுதான் ஏழைகளுக்கு சேவை செய்வார். இவருடைய மனைவியை அவ்வளவு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், சமூக நல செயல்களுக்கு அவரை கூட்டிக்கொண்டே வந்திருக்கக்கூடாது. மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டியது தானே. ரத்தன் டாடாவை பற்றி தயவு செய்து படிங்க, ரத்தன் டாடா தான் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துவிட்டு சென்றார். அவர் அப்படி கொடுத்ததை எங்குமே விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.
ஒரு நியாயம் வேண்டாமா: ஆனால், இந்த புதுப்பணக்காரணுங்க இருக்காங்க பார்த்தீங்களா, இவங்க பண்ற கூத்து இருக்கே கூத்து. தன்னிடம் பணம் இருக்கிறது என எப்படி எல்லாம் கேவலமாக நடந்து சொல்கிறார்கள். இங்க தான் அவனது மூளையில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுது. இந்த மாதிரி சீப் மெண்டாலிட்டி உள்ளவர்களை பற்றி பெரிய லிஸ்டே இருக்கிறது என்றார். அதோ விடாமல், இரண்டாவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு, இதில் எனக்கு எந்த வன்மமும் இல்லை, மற்றவருக்கு செய்யும் உதவியை ஏன் வீடியோ எடுத்து வெளியிட வேண்டும். பிரபலங்களை நேர்காணல் நடத்தும் போது குறைந்த பட்சம் அதற்காக தயாராக வேண்டாமா, மம்முகா என்று கூறுவதற்கு பதிலாக மாமுகா என்று கூறுவது, கார் விபத்து, துபாய்க்கு சென்று கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவில் அறிவித்தது. இதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எல்லாத்தையும் கன்டென்டாக பார்த்தா இப்படித்தான் தோணும். ஒரு குறைந்தபட்ச தொழில் தர்மம், சமூக அக்கறை இல்லாதபோது மீண்டும் இதுபோல் சர்ச்சையில் சிக்குவார் என கூறியிருந்தார். Birthday trip vietnam


Click it and Unblock the Notifications











