பாக்சிங் பயிற்சி எடுக்கும் ஆண்டிரியா...யாருடன், எதற்கு தெரியுமா ?
சென்னை : நடிகை ஆண்டிரியா தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டு பரபரப்பை கிளப்பியது. இந்த படத்தில் ஆண்டிரியா ஒரு சீனில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பது படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது. மிகுந்த பாதுகாப்புடன், செட்டில் குறைவான ஆட்களுடன் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக மிஷ் சமீபத்தில் கூறி இருந்தார்.
இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப்பும் நடிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பாராட்டை குவித்து வரும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, துஷ்ரா விஜயன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே பிளாக் பஸ்டர் படமாகி விட்டது சார்பட்டா பரம்பரை. பாக்சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 1970 களில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர்.
இந்த படத்தில் நடித்த வேம்புலி, டான்சிங் ரோஸ் போன்ற கேரக்டர்கள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. டான்சிங் ரோஸ் கேரக்டரில் சபீர் கலரிக்கல், ஜான் கோக்கன், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை ஆண்டிரியா, சந்தோஷ் பிரதாப்புடன் பாக்சிங் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

அதிலும் பேண்ட் அணியாமல், ஒயிட் ஷர்ட் மட்டும் அணிந்து, படு கவர்ச்சியாக ஆண்டிரியா பாக்சிங் செய்யும் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பாக்சிங் ஓகே, ஆனா பேண்ட் போட மறந்துட்டீங்களே என சிலர் ஆண்டிரியாவை கலாய்த்தும் வருகின்றனர்.
ஆண்டிரியா பாக்சிங் பயிற்சி எடுப்பதால் பிசாசு 2 படத்தில் ஆக்ஷன் காட்சியில் அவர் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இருந்தாலும் ஆண்டிரியாவின் பாக்சிங் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications