ஆண்டிரியாவின் இசையமைப்பாளர் அவதாரம்...
சென்னை: நடிகை ஆண்டிரியா தற்போது நடித்து வரும் 'தரமணி' படத்தில் ஒரு பாடலை எழுதி, அதற்கு இசையும் அமைத்து அவரே பாடியுமுள்ளாராம்.
சிறந்த பின்னணி பாடகி, நடிகை என பிரபலமானவர் ஆண்ட்ரியா. அவ்வபோது, காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் இவர், தற்போது இயக்குநர் ராமின் இயக்கத்தில் தரமணி என்றப் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான பாடல் ஒன்றை அவரே எழுதி, இசையமைத்துப் பாடி கலக்கியிருக்கிறாராம். ஆண்ட்ரியாவின் பாடலை 'சோல் ஆப் தரமணி' என புகழ்கிறார் இயக்குநர் ராம்.

தரமணி....
ராம் இயக்கத்தில், ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.சத்தீஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் 'தரமணி'. இதில் நாயகனாக வசந்த் ரவி என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசையமைக்கிறார். இப்படத்திற்காக, ‘தி சோல் ஆப் தரமணி' என்ற ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.

பாடல் வெளியீடு...
நேற்று முந்தினம் இப்படத்தின் புரொமொஷனுக்கு பயன்படுத்தப்படும் இப்பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதியா ஆகியோர் கலந்து கொண்டு இப்பாடலை வெளியிட்டனர்.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்....
‘ஆண்ட்ரியா பாடலுக்கு இசையமைப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல நடிகை, சிறந்த பாடகி என தான் நான் நினைத்து வந்தேன். ஆனால், அவரது இசையைக் கேட்டு நான் ஆச்சர்யமடைந்து விட்டேன். அவரது இசைத் தொகுப்புகளைக் கேட்ட நான், அவற்றில் ஒன்று என் கதைக்கு பொருத்தமானதாக இருக்கும் என தீர்மானித்தேன்' எனப் பாராட்டியுள்ளார் தரமணி படத்தின் இயக்குநரான ராம்.

சோல் ஆப் தரமணி....
மேலும், ஆண்ட்ரியா தனது பாடலை தரமணி படத்தில் பயன்படுத்திக் கொள்ள சம்மதித்தால், அப்பாடலை இப்படத்தின் முக்கியப் பாடலாக மாற்றி விட்டோம் என்றார்.

கண்ட நாள் முதலாய்....
தனது திரையுலக வாழ்க்கையை பிண்ணனி பாடகியாகத் தான் ஆண்ட்ரியா துவக்கினார். இவரது முதல் பாடல் கடந்த 2005ம் ஆண்டு ‘கண்ட நாள் முதல்' படத்தில் வெளியானது.

நாயகியாக முதல் படம்...
கதாநாயகியாக சரத்குமார் ஜோடியாக கௌதம் மேனன் இயக்கத்தில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமானார் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

விரைவில் ரிலீஸ்....
அவரது மலையாளப் படமான ‘லண்டன் பிரிட்ஜ்' மற்றும் தமிழில் விஸ்வரூபம்-2, அரண்மனை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஆண்ட்ரியாவின் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா, ஹூ இஸ் தி ஹீரோ' போன்றப் பாடல்கள் பிரபலமானவை.


Click it and Unblock the Notifications











