துப்பறிவாளன் விஷாலின் நிம்மதியை கெடுக்கும் ஆண்ட்ரியா
சென்னை: விஷாலின் துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்கிறாராம்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வரும் படம் துப்பறிவாளன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த அக்ஷரா ஹாஸன் படத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
ஆண்ட்ரியா விஷாலுக்கு வில்லியாக நடிக்கிறாராம். சண்டை காட்சிகளிலும் அவர் நடிக்க உள்ளாராம். படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. முன்னதாக விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தார்கள்.
டேட்ஸ் இல்லை என்று கூறி அவர் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications