லோகேஷ் கனகராஜின் திடீர் ரொமான்ஸ்.. மாஸ்டர் பட நடிகை ஆண்ட்ரியா என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்து நடித்ததை பார்த்து மாஸ்டர் படத்தின் நடிகை ஆண்ட்ரியா அடித்த கமெண்ட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து விக்ரம் படத்தில் தலை துண்டாக போன காயத்ரியும் கமெண்ட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கைதி படத்தில் நடித்தார்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவான கைதி திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தளபதி விஜய்யின் பிகில் படத்துடன் தைரியமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் முதல் கோலிவுட்டில் சரத்குமார் என பலரும் அப்போது அந்த படத்தை பாராட்டித்தள்ளினர்.
அடுத்தடுத்து வளர்ச்சி: கைதி 2 படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தை ஆரம்பித்தார் லோகேஷ் கனகராஜ். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் போட்டி போட்டு நடித்த அந்த திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு தியேட்டர்களுக்கு மீண்டும் ரசிகர்களை வரவைத்தது.

விக்ரம்: மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மானசீக மாஸ்டர் கமல்ஹாசனுக்கு ஒரு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என விக்ரம் படத்தை இயக்கும் ஏஜென்ட் லோகேஷ் கனகராஜாக மாறிவிட்டார். கைதி படத்திலிருந்த கதாபாத்திரங்களை விக்ரம் படத்தில் கொண்டு வந்து எல்சியூவையும் ஆரம்பித்தார்.
ஹீரோயின்கள் காலி: இவரது படங்கள் என்றாலே காதல் காட்சிகள் பெரிதும் இருக்காது. மேலும், காதலை பிரித்து விடுவார். காதலர்களில் ஒருவரை போட்டு தள்ளி விடுவார். விக்ரம் படத்தில் உச்சகட்டமாக பகத் ஃபாசிலின் காதலியாக நடித்த காயத்ரியின் தலையை விஜய்சேதுபதி அறுத்து போட்டு விடும் காட்சி பதை பதைக்க வைத்திருக்கும். இவருக்கு மனநலம் சரியில்லை என்றும் இவர் ஒரு சைக்கோ என்றும் கூட இவர் மீது வழக்கு தொடரப்பட்ட காமெடிகள் எல்லாம் நடந்தது.
ஸ்ருதியுடன் ரொமான்ஸ்: ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து டூயட் பாடி அவரை கட்டிப் பிடித்து உருண்டு புரண்டு நடித்த நடிப்பை பார்த்து டோட்டல் தமிழ் சினிமாவே ஷாக்காகி கிடக்கிறது. கையில் கத்தியும், பெரிய பெரிய துப்பாக்கிகளையும் கொடுத்து ஹீரோக்களை கொலவெறி பிடித்தவர்களாக நடிக்க வைக்கும் லோகேஷ் கனகராஜுக்குள் இப்படியொரு ரொமான்டிக் ஹீரோ இருக்கிறாரா என பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். கல்லுக்குள் ஈரம் என பிரகாஷ் ராஜ் மீம் டெம்பிளேட்டையும் போட்டு வருகின்றனர்.
கேள்வி கேட்ட காயத்ரி: விக்ரம் படத்தில் தன்னுடைய கழுத்தை அறுத்து காதலுக்கு வேட்டு வச்சுட்டு இதெல்லாம் நியாயமாரே என லோகேஷ் கனகராஜை பார்த்து நறுக்கென கேள்வி எழுப்பி இருந்தார் காயத்ரி. இந்நிலையில், அவரை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் லோகேஷின் ரொமான்ஸ் பற்றி பேசியுள்ளார்.
ஆண்ட்ரியாவும் விடல: மாஸ்டர் படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்த ஆண்ட்ரியா அடுத்ததாக 'கா' படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் ஆண்ட்ரியாவிடம் லோகேஷ் ரொமான்ஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவர் கதை எழுதும் போது இந்த ரொமான்ஸ்லாம் வரலையா.. அப்படின்னு நான் சொல்லல அந்த பாடல் டீசரின் கமெண்ட் பக்கத்தில் பார்த்தேன்" என நைசாக எஸ்கேப் ஆகி விட்டார்.


Click it and Unblock the Notifications











