கல்யாணம் ஆகலனு கஷ்டப்பட்டேன்.. திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஆண்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா திருமணம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "திருமணம் ஆகவில்லை என்பதற்காக வாழ்க்கை முழுமையற்றதாகவிட முடியாது என்ற அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. தற்போது இவர், அரசன் மற்றும் சர்தார் 2, மனுஷ், நோ என்ட்ரி, பிசாசு 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கும் எப்போதும் வெளிப்படையாக பதிலளித்து வருகிறார்.

Andrea Marriage
Photo Credit:

பயம் இருந்தது: அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய ஆண்ட்ரியா, "நான் பார்க்க சந்தோஷமாகத்தானே இருக்கிறேன். அதுவே போதும். ஒரு காலத்தில் எனக்கும் கல்யாணம் ஆக வேண்டும் என்ற பெரிய அழுத்தம் இருந்தது. குறிப்பாக 30 வயதை கடந்தபோது 'இன்னும் திருமணம் ஆகவில்லையே' என்ற பயம் இருந்தது. சில மாப்பிள்ளைகளை சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் வாழ்க்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் வேறு கோணத்தில் புரிந்து கொண்டேன். திருமணம் செய்த எல்லோரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வாழ்க்கையில் சில விஷயங்கள் கட்டாயப்படுத்தி நடக்கக் கூடாது. அதற்கான நேரம் வந்தால் அது தானாக நடக்கும் என தனது பார்வையில் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

அரசன்: ஆண்ட்ரியாவின் இந்த பேச்சு பல பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக திருமணம் குறித்து சமூக அழுத்தம் எதிர்கொள்ளும் பெண்களுக்கு அவரது வார்த்தைகள் தைரியம் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் சிலர், வாழ்க்கையை தன்னிச்சையாக வாழும் தைரியம் ஆண்ட்ரியாவுக்கு இருக்கிறது என்றும் பாராட்டி வருகின்றனர். ஆண்ட்ரியா நடித்து வரும் அரசன் திரைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X