ஆண்ட்ரியா பிறந்தநாள்.. பாடியும், நடித்தும் சேர்த்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. மேடம் கெத்துதான்
சென்னை: பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் ஜொலித்துவருபவர் ஆண்ட்ரியா. கடைசியாக அவர் மாஸ்க் படத்தில் நடித்திருந்தார். நடித்தது மட்டுமில்லாமல அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவர் நடித்திருக்கும் பிசாசு 2 படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் பின்னணி பாடகியாக தனது பயணத்தை ஆரம்பித்தவர். பல மியூசிக் டைரக்டர்களுக்கு ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடிய அவரை பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கௌதம் மேனன் நடிப்பதற்கு அழைத்து வந்தார். அதில் சரத்குமாருக்கு மனைவி ரோலை ஏற்றிருந்த ஆண்ட்ரியா தனது நடிப்பை கச்சிதமாக கொடுக்க; மற்ற இயக்குநர்களும் அவரை புக் செய்ய ஆரம்பித்தார்கள். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அவள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
பாடலையும் விடாத ஆண்ட்ரியா: நடிகையாக பிஸியானதால் பாடல் பாடுவதை நிறுத்திவிடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் தன்னை வளர்த்த துறையை மறக்காத அவர் தொடர்ந்து பாடல்கள் பாடுகிறார். புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா தனது கிறக்கமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது குரல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

மாஸ்க் திரைப்படம்: நடிப்பு, பாடல் என பம்பரமாய் சுழலும் ஆண்ட்ரியா கடைசியாக மாஸ்க் படத்தில் நடித்திருந்தார். விகர்ணன் இயக்கியிருந்த அப்படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் இத்தனை நாட்கள் ஹீரோயின், கெஸ்ட் ரோல் செய்துகொண்டிருந்த ஆண்ட்ரியா; இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று மிரட்டியிருந்தார்.
தயாரிப்பாளர் ஆண்ட்ரியா: மாஸ்க் படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அப்படத்தை வெற்றிமாறனுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்தார். நடிப்பு, பாடல் இரண்டிலும் ஜொலித்தது மாதிரி இதிலும் ஜொலிக்கலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. விமர்சன ரீதியாக பெரிய அளவெல்லாம் லாபம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அடுத்ததாக பிசாசு 2 படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அதனை மிஷ்கின் இயக்கியிருக்கிறார்.
ஆண்ட்ரியாவின் சொத்து மதிப்பு: இந்நிலையில் அவர் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிவரும் சூழலில்; அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரிடம் மொத்தம் 30 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். மினி கூப்பர் உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் அவரிடம் சவரன் கணக்கில் வைர நெக்லஸ்களும் இருக்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications











