என் காதல் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கக் கூடாது... ஆண்ட்ரியா
Recommended Video
சென்னை: என் காதல் பற்றி நான் வெளிப்படையாக பேசியிருக்கக் கூடாது என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வட சென்னை படத்தில் நடித்திருந்தார்.
இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரது புத்தகத்தில் இருந்த கவிதை ஒன்றை பாடலாக்கி பாடினார். அது காதல் தோல்வி பாடல்.

அரசியல்வாதி
அப்போது அதுபற்றி கேட்டபோது, தான் அரசியல்வாதி ஒருவரை காதலித்ததாகவும் அவரால் ஏமாற்றப்பட்டதாகவும் ஆண்ட்ரியா சொன்னதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து அந்த அரசியல்வாதி யார் என்ற ஆவல் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விளக்கம்
இந்நிலையில் அப்போது பேசியதற்கு இப்போது விளக்கமளித்துள்ளார் ஆண்ட்ரியா. அவர் கூறும்போது, பெங்களூரில் நடந்த இலக்கிய விழாவுக்கு என் தோழி, கடந்த வருடம் அழைத்திருந்தார். போக முடியவில்லை.

மீடியா இல்லை
இந்த வருடம் அழைத்தார். சென்றேன். அங்கு மீடியா இல்லை, எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதால் நடிகை என்பதை மறந்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசினேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.

10 வருடத்துக்கு முன்
நான் கவிதை வாசித்தேன். அப்போது அதுற்றி கேட்கப்பட்டது. அது 10 வருடத்துக்கு முன் எழுதியது. எனது கடினமான உறவு பற்றிய கவிதை அது என்றேன். நான் வாசித்த கவிதை பற்றி வேறுவிதமாகப் பின்னர் பேசினார்கள். இதனால் கோபம் வந்தது. காயப்பட்டேன்.

ஆண் பற்றியதல்ல
நேர்மையாக இருந்தால் இப்படித் தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தான் அமைதியாக இருக்கிறேன். புரோக்கன் விங்ஸ் என்ற எனது புத்தகம் ஓர் ஆண் பற்றிய புத்தகமல்ல. அது என்னைப் பற்றியது. என் முதல் காதல் முறிவு, கனவுகள் பற்றியது. ஆனா நடிகர், அரசியல்வாதி என்று இணைத்துப் பேசுவதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











