தன் மகனுடன் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..கியூட் பாய் என கொஞ்சும் ரசிகர்கள் !

சென்னை: தன் மகனுடன் இருக்கும் கியூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

நடிகையாக மட்டும் இல்லாமல் பல திறமைகளை கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து கொண்டு இருப்பவர் தான் ஆண்ட்ரியா.

எப்போதும் தினசரி நிகழ்வுகளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டு இருப்பார்.அந்த வகையில் பகிரப்பட்டது தான் இந்த புகைப்படங்கள் .

நல்ல நடிப்பு

நல்ல நடிப்பு

கண்ட நாள் முதல் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா,பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற கெளதம் மேனன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தன் திறமையான நடிப்பால் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டார்.பிறகு இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மெகா ஹிட் ஆனது.கதை தேர்வுகளிலும் தேர்ந்தவர் தான் ஆண்ட்ரியா என்று பேசும் அளவுக்கு மாறினார்.

கமலுடன் இணைந்து

கமலுடன் இணைந்து

கமல் படமான மன்மதன் அம்பு படத்தில் இவர் பாடிய ஹூஸ் தி ஹீரோ பாடல் ஹிட் கொடுக்க,கமலுடன் இணைந்து நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து .விஸ்வரூபம் படத்தில் கமலுடன் இணைந்தார் ஆண்ட்ரியா.அடுத்துதடுத்து வந்த அணைத்து படங்களும் நன்றாக போக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இப்பொது வரை இருக்கிறார்.

மாஸ்டர்

மாஸ்டர்

உத்தமவில்லன் ,தரமணி, துப்பறிவாளன்,விஸ்வரூபம் 2,வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 என்று அனைத்தும் ஹிட் படங்களாய் அமைந்து விட்டது . மாஸ்டர் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பேசப்படவில்லை என்றாலும் படம் ஹிட் அடித்தது.தற்போது இவர் நடிப்பில் வெளிவர ஐந்து படங்களுக்கு மேல் காத்து கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

நாய் குட்டி

நாய் குட்டி

நடிப்பெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தனது தினசரி நிகழ்வுகளை சமூகவலைதளப்பாக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர் .அந்த வகையில் தனது செல்ல நாய்க்குட்டி ஜான்ஸ்நொவை தன் மகன் என்று கூறி அதனுடன் செல்ப்பி எடுத்து பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. அந்த நாய்க்குட்டிக்கு தனியாக இன்ஸ்டா பக்கமும் உள்ளது.அதனை மூன்றாயிரம் நபர்களுக்கு மேல் பின்தொடர்கின்றனர் என்பது தான் ஆச்சரியமான ஒன்று.சமீபத்தில் இவர் பதிவிட்ட மாலத்தீவு புகைப்படங்கள் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X