Pahalgam: பகல்காமுக்கு சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்கள்.. மனசை உலுக்கிடுச்சாம்!

சென்னை: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு 27 பேரை கொடூரமாக கொன்றது ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் சுற்றுலவுக்கும் ஹனிமூனுக்கும் சிறந்த இடமாக விளங்கி வருகிறது. ரோஜா படத்தில் இருந்தே அந்த இடத்துக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை படங்களிலும் எடுத்துக் காட்டியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் அந்த இடத்தில் அமைதியான சூழல் நிலவவில்லை என்பதைத் தான் நேற்றைய சம்பவமும் உணர்த்துகிறது.

பகல்காமில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் பல அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில், பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை பலரும் கொதித்தெழுந்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Andrea Jeremiah shares her throwback Pahalgam tour photos after the recent attack shocks everyone

அக்‌ஷய் குமார், சோனு சூட், சஞ்சய் தத் என பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா நானும் அந்த இடத்துக்கு சுற்றுலா சென்ற பயணி தான் என தனது த்ரோபேக் அனுபவங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.

குலையே நடுங்குது: தீவிரவாத தாக்குதல்களை படங்களில் வைத்தால் கூட அது மிகைப்படுத்தப்படும் காட்சிகள் என கடைசியாக கடந்த ஆண்டு வெளியான அமரன் படம் வரைக்கும் பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இன்னமும் ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருவதை பார்த்தாலே குலையே நடுங்குகிறது என பல பிரபலங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

திருப்பி அடிக்க வேண்டும்: சுற்றுலா சென்ற 27 பேரை கொடூரமாக சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது என்றும் இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து பழிக்குப் பழி வாங்க வேண்டும் என பல பிரபலங்களே கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நானும் பகல்காம் போயிருக்கேன்: இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா சற்று எக்ஸ்க்ளூசிவாக நானும் அந்த இடத்துக்குச் சுற்றுலா சென்ற பயணிதான் என பதிவிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளது. சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சென்று வரும் ஒரு சுற்றுலா பகுதியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் எப்படி நடத்த அவர்களுக்கு மனசு வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அழகான பனி சூழ்ந்த இடம்: திருமணமானவர்கள் ஹனிமூனுக்குச் செல்லக்கூடிய அழகான பனி சூழந்த இடமாக திகழும் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பனிமலைகளுக்கு இடையே நடிகை ஆண்ட்ரியா போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும், அங்கே இருக்கும் கள்ளம் கபடம் அறியாத குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்திருக்கிறார்.

லியோ ஷூட்டிங்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ திரைப்படமும் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படத்தின் சில காட்சிகளும் அங்கே படமாக்கப்பட்டுள்ளன. மீண்டும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அங்கே சுற்றுலாவும் பெரிதளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X