’தளபதி 64’ல் இணைந்த ஆண்ட்ரியா.. கைதி பட இயக்குநர் கன்பார்ம்!

கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளார்.

சென்னை: தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையை படைத்து வருகின்றன.

கைதி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.

வடசென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின.

அதிகரிப்பு

அதிகரிப்பு

தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுள்ளதால், திரையரங்குகளில் கைதி படத்திற்கு கூடுதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இப்படியொரு படத்தை இயக்கியதற்காக பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

தளபதி 64

தளபதி 64

கைதி படத்தின் வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கூடுதல் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கி வரும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் வட சென்னையில் பயங்கர ஸ்பீடாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் வேதா, பேட்ட படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த படத்தில் மாஸ் வில்லனாக களமிறங்கவுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த மாளவிகா மோகனன் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வதந்தி அல்ல

வதந்தி அல்ல

இந்நிலையில், தளபதி 64 படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியானது. தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், அந்த செய்தி வதந்தியாக இருக்கும் என்றும் சிலர் கூறினார்.

ஆனால், அது வதந்தி அல்ல, ஆண்ட்ரியா தளபதி 64 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கன்ஃபார்ம் செய்துள்ளார்.

திறமைக்கு மரியாதை

திறமைக்கு மரியாதை

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை என பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. ஆனால், இன்னமும் தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கான சிறந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஆண்ட்ரியாவின் திறமையான நடிப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் தளபதி 64 படத்தில் அவருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X