ஆன்ட்ரியா சிங்கிள் தான், சிம்புவை காதலிக்கவில்லை
சென்னை: ஆன்ட்ரியா சிம்புவை காதலிக்கவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் வி.டி.வி. கணேஷ் தயாரித்து ஹீரோவாக டிக்கும் படம் இங்க என்னா சொல்லுது. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், சந்தானம், சொர்ணமால்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தில் சிம்பு மற்றும் ஆன்ட்ரியா கௌரவ வேடத்தில் வருகின்றனர்.

காதல்
இங்க என்னா சொல்லுது படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், ஆன்டிரியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஹன்சிகா கோபம்
சிம்புவை காதலிக்கிறேன் என்று ஹன்சிகா அறிவித்தார். இந்நிலையில் சிம்பு, ஆன்ட்ரியா காதல் செய்தி கேட்டு ஹன்சிகா கோபத்தில் உள்ளார் என்று கூறப்பட்டது.

5 மணிநேரம் தான்
இங்க என்னா சொல்லுது படத்திற்காக சிம்புவும், ஆன்ட்ரியாவும் சேர்ந்து வெறும் 5 மணிநேரம் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தனர். அவர்கள் வெறும் சக நடிகர்கள் தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று ஆன்ட்ரியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கிள்
ஆன்ட்ரியா யாரையும் காதலிக்கவில்லை. அவர் சிங்கிளாக இருந்து வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறார் என்று ஆன்ட்ரியாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


Click it and Unblock the Notifications











