விஜய்யின் அரசியல்.. எனக்கு விருப்பமில்லை.. ஓபனாக சொல்லிவிட்ட ஆண்ட்ரியா
சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. அவ்வப்போது கான்செர்ட்டையும் நடத்துகிறார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா.
நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் தனித்துவமான குரலுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையான ஆண்ட்ரியா: பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.
செல்வராகவன் ஹீரோயின்: இதனையடுத்து சில வருடங்கள் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.
முன்னணி நடிகை: அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
வடசென்னை ஆண்ட்ரியா: ஆண்ட்ரியாவின் கரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில்; தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு வடசென்னை படத்தின் ப்ளஸ்களில் ஒன்றாகும். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் பாடுவதையும் விடாமல் வைத்திருக்கிறார். இப்போது கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஆண்ட்ரியா பேட்டி: இந்நிலையில் புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, 'விஜய் அரசியலுக்கு வருவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை’ என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை நினைத்து மகிழ்ச்சி என்று சொன்னார்கள். இப்போது ஆண்ட்ரியாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











