அடேங்கப்பா.. ஆண்ட்ரியாவா இது… வைரல் புகைப்படம் !

சென்னை : சமீப காலமாக ரசிக்ககூடிய பல கவர்ச்சி புகைப்படங்களையும், திரைப்படங்களில் சவாலான பல கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரிமியா.

அழகே பொறாமைப்படும் பேரழகியாக இருக்கும் ஆண்ட்ரியா தனது துடிப்பான நடிப்பின் மூலம் பல லட்சம் ரசிகர்களின் இதயத் துடிப்பாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் குளியலறையில் சாவகாசமாக படுத்துக்கொண்டு கையில் சரக்குடன் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட ஆண்ட்ரியா தற்போது அனைவரும் ஆச்சரிப்படும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறந்த பாடகியாக

சிறந்த பாடகியாக

இனிமையான குரலின் மூலம் இன்றளவும் இளைஞர்களின் இதயத் துடிப்பாக இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா சிறந்த பாடகியாக மட்டுமல்லாமல் சிறந்த நடிகையாகவும் தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பல்வேறு நடிகைகளுக்கும் சவாலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்பொழுது சோலோ ஹீரோயினாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பேக்கரி அயிட்டங்கள்

பேக்கரி அயிட்டங்கள்

சமையலில் கில்லாடியான ஆண்ட்ரியா அவ்வப்போது வீட்டில் கேக் மற்றும் பிஸ்க்கட்டுகளை அவ்வப்போது செய்து அதை போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவது இவரது வழக்கமாக இருந்து வருகிறது. பாடகியாகவும் நடிகையாகவும் நமக்கு மிகவும் அறிமுகமான ஆண்ட்ரியா பேக்கரி அயிட்டங்கள் செய்து அசத்தி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

நிர்வாணமாக நடிக்க தயார்

நிர்வாணமாக நடிக்க தயார்

இது ஒருபுறமிருக்க அவ்வப்போது கண்களுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களையும் தாராளமாக பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் வெப்சீரிஸில் நல்ல கதைக்களம் கொண்ட கதாபாத்திரமாக இருந்தால் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க தயார் என சமீபத்தில் இவர் தெரிவித்திருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் இவரது ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது.

எப்படி சாத்தியமானது

எப்படி சாத்தியமானது

இவ்வாறு தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா சமூக வலைதளங்களிலும் செம பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்பொழுது பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது மட்டுமில்லாமல் உங்களால் மட்டும் எப்படி சாத்தியமானது கேட்கவும் வைத்திருக்கிறது.

10 ஆண்டு சேலஞ்ச்

10 ஆண்டு சேலஞ்ச்

சில மாதங்களுக்கு முன்பு 10 ஆண்டு சேலஞ்ச் என்ற சவால் பிரபலமாகி வந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன் தற்போதுள்ள புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ள இந்த பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

சிறுவயது புகைப்படத்தில் கையில் இளநீரை வைத்துக்கொண்டு குடிப்பது போல க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் ஆண்ட்ரியா, அந்த புகைப்படத்தில் இருப்பது போலவே தனது ஹேர் ஸ்டைலை குட்டி ஆண்டியா போல மாற்றி கன்னத்தில் கைவைத்தவாறு க்யூட்டாக இருக்கும் இரண்டு புகைப்படத்தையும் இணைத்து அன்றும் இன்றும் என பதிவிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.

போட்டோல இளநீர் இல்ல

போட்டோல இளநீர் இல்ல

இந்த பதிவிற்கு பலரும் நீங்கள் சிறுவயதில் எப்படி இருந்தீர்களோ அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றீர்கள் என ஆண்ட்ரியாவை பலரும் புகழ்ந்து வரும் நிலையில் ஒருவர் அந்த போட்டோவில் இளநீர் இருக்கு இந்த போட்டோல இளநீர் இல்ல என ஜாலியாக சில கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X