Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆற அமர உட்கார்ந்து பானை செய்யும் ஆண்ட்ரியா..வைரலாகும் வீடியோ!
சென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் லீட் ரோலில் நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
மாஸ்டரில் விஜய்யுடன் இணைந்து கலக்கிய ஆண்ட்ரியா ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் அப்படியே கண்ணுக்குள்ளே நிற்கிறார்.
இந்த நிலையில் ஃப்ரீ டைமில் இதுவரை குக்கிங் செய்து அசத்தி வந்த ஆண்ட்ரியா இப்பொழுது கைவசம் பானை செய்வதையும் கற்றுக் கொண்டு அசத்தி வருகிறார்.

பன்முகத் திறமையான
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையான நடிகையாக உள்ள நடிகை ஆண்ட்ரியா தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் கதாபாத்திரத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக தேர்ந்தெடுத்து நடித்து அதில் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இயக்குனர் ராமின் தரமணியில் ஆரம்பித்த இவரது வித்தியாசமான கதைத் தேர்வு வட சென்னை வரை தொடர்ந்திருக்கிறது.

நல்ல பாடல்களையும்
சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா அதன்பின் படவாய்ப்புகள் குவிந்ததால் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் ஹிட்டானதால் நடிப்பைத் தொடர்ந்து அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நல்ல பாடல்களையும் பாடி ரசிகர்களை உருக வைத்து வருகிறார்.

பிசாசு பாகம்-2
பெரும் எதிர்பார்ப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்த ஆண்ட்ரியா அதில் விஜயுடன் ஒரு பாடலில் வந்து செம குத்தாட்டம் போட்டிருப்பது ரசிகர்கள் விசிலடித்து வரவேற்க வைத்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்பொழுது மிஸ்கின் இயக்கும் பிசாசு பாகம்-2 லீட் ரோலில் நடித்து வர அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது இந்தப் படமும் ஆண்ட்ரியாவுக்கு மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மற்றுமொரு டேலண்ட்
நடிப்பு நடனம் பாடல் கவர்ச்சி என அனைத்திலும் கைதேர்ந்து பன்முக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் சமையலில் கில்லி. வித விதமான புதுபுது டிஷ்களால் அசத்தி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இவருக்கு மற்றுமொரு டேலண்ட்டும் இருக்கிறது என்பது இப்போதுதான் தெரிந்தது.

இன்னும் எவ்வளவு திறமை
நடிப்பு தவிர சமையலில் அசத்தி வந்த ஆன்ட்ரியா இப்பொழுது மண்பானை மற்றும் மண் சம்பந்தப்பட்ட பொருட்களை செய்வதிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் வீட்டில் சின்ன மண்பானை செய்யும் மெஷினை வைத்து அழகான ஒரு மண் கோப்பையை உருவாக்கி இருக்கிறார். அதை களிமண்ணால் செய்யும் வீடியோவை இப்போது சமூக வலைத் தளத்தில் பதிவிட பலரும் உங்களிடம் இதுபோல இன்னும் எவ்வளவு திறமை இருக்கிறது என கேட்டு வருகின்றனர்.